சட்டமேதை அண்ணல் அம்பேதகர் பிறந்தநாள் ; தலைவர்கள் வாழ்த்து!

Rate this post

சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 128-பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கும் உருவப்படத்திற்கும் அரசியல் கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினர் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்தியாவின் சரித்திர நாயகன், ஜனநாயக இந்தியாவின் அடிநாதமான சட்டத்தை இயற்றிவர், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து அயராமல் குரல் கொடுத்து வந்தவர், சமத்துவத்தை போற்றிய டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் 128-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது சிலைக்கும், உருவ படத்திற்கும் இந்தியா முழுவதும் அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கரின் படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். அதேபோல் பிரதமர் மோடியும் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கரின் படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். அவருடம் துணை குடியரசுத் தலைவர் வெங்கைய்யா நாயுடுவும் உடனிருந்தார்.

தமிழகத்தை பொறுத்தவரையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கோடம்பாக்கத்தில் உள்ள அம்பேத்கரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அவர்களுடன் அமைச்சர்களும் உடனிருந்தனர்.

இதேபோல், எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் கோயம்பேடில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். அவருடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் உடனிருந்தார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*