இந்தியா

சண்டையில் ராணுவ மேஜர் உயிரிழப்பு

ஆனந்த்நாக் மாவட்டம் அசாபால் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து பாதுகாப்பு படையினர் அப்பகுதியை சுற்றிவளைத்து பயங்கரவாதிகளை தேடும் பணியை மேற்கொண்டனர். அப்போது இருதரப்பு இடையே சண்டை வெடித்தது.

பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ராணுவ மேஜர் உயிரிழந்துள்ளார். 3 வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அங்கு பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Comment here