ஆயுர்வேதம்

சதாவேரி

வளமிக்க இரும்பொறை மண், செம்மண் நிலங்கள் ஏற்றவை, வடிகால் வசதிஉடைய மண் எனில் மிகவும் ஏற்றது. ஓரளவு வறட்சியை தாங்க வல்லவை. 1500 முதல் 4000 அடி உயரமுள்ள மலைப் பிரதேசங்களில் இதன் வளர்ச்சி நன்றாக இருக்கும், 15 டிகிரி முதல் 32 டிகிரி செல்சியஸ் தட்பவெப்பம் இருப்பது நல்லது. மெல்லிய நறுமணமுடைய இக்கிழங்குக் கொடிகள் 6 அடி உயரம் வரை வளரக்கூடியது. தண்டுகளில் சிறிய முட்களை உடைய இந்தச் செடி ஒவ்வொன்றிலும் 15 – 20 நீண்ட கிழங்குகள் தோன்றும். இதன் இலைகளில் பறித்தவுடன் டையோஸ்ஜெனின் என்ற வேதியப்பொருள் கிடைக்கும். இதன் பழங்கள் மற்றும் பூக்களில் க்ளைக்கோசைடுகளான குயர்செட்டின்நிட்டின், மற்றும் ஹைப்பரோசைடு, சிட்டோஸ்டீரால், ஸ்டிக்மாஸ்டீரால் மற்றும் வேர்க் கிழங்குகள் மூலம் பயிர் பெருக்கம் செய்யப்படுகிறது. கிழங்குகள் முதிர்ச்சி அடைய 12 – 14 மாதங்கள் ஆகும். இதன் வேர் கிழங்குகளை நன்கு வெய்யிலில் காயவைத்து இழஞ்சூடாய் இருக்கும் போது இயற்கை தன்மை மாராமல் கிழங்குகளைக் காற்றுப் புகா கோணிப்பைகளில் சேமித்துவைத்தல் வேண்டும்.

Comment here