Sliderவரலாறு

சமணர் எனும் சொல் சாவகர், அருகர், ஆசீவகர்.

பொதுவாகக்குறிப்பிடும் சமணம் என்ற சொல் ஜைனரை மட்டும் குறிப்பிடும் சொல் அல்ல .அந்த சமணர் எனும் சொல் சாவகர், அருகர், ஆசீவகர் ஆகியவர்களைச் சேர்த்துக் குறிக்கும் பொதுச்சொல்ஆகும்
இதை கீழ் கண்ட சான்றுகள் மூலம் காணலாம்

திவாகர முனிவரால் கிபி 8ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட திவாகர நிகண்டு எனும் தமிழ் மொழி நிகண்டு, ஜைனர்களை(அருகர்) சமணரின் ஒரு பிரிவினராகக் குறிப்பிடுகிறது.

சாவகர் அருகர் சமணர் ஆகும்;
ஆசீ வகரும் அத்தவத் தோரே
– திவாகர நிகண்டு
அதாவது, சமணர் எனும் சொல் சாவகர், அருகர், ஆசீவகர் ஆகியவர்களைச் சேர்த்துக் குறிக்கும் பொதுச்சொல் எனக் குறிப்பிடுகிறது.
திவாகர முனிவரின் மாணாக்கருள் ஒருவரான பிங்கல முனிவர், தான் இயற்றிய பிங்கல நிகண்டு எனும் தமிழ் மொழி நிகண்டில்
ஜைனர்களை(அருகர்) சமணரின் ஒரு பிரிவாகக் குறிப்பிடுகிறார்.

சாவகர் அருகர் சமணர் அமணர்
ஆசீவகர் தாபதர் அத்தவத் தோரே
– ஐயர் வகை, பிங்கல நிகண்டு

இரட்டைக்காப்பியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகிய காப்பியங்களின் படி,

கண்ணகி சமண நெறியில் உள்ள சாவகத்தையும்
கோவலன் மற்றும் மாதவியின் மகளான மணிமேகலை, வாழ்வின் இறுதியாக புத்தத்தையும்தழுவ ,
கோவலனுடைய மாமனும், கண்ணகியின் தந்தையுமாகிய மாநாய்கன் என்னும், செல்வத்தில் மேம்பட்ட வணிகன்,
கோவலனும்,கண்ணகியும் உயிர்நீத்த செய்தி கேட்டு உலகத்தை வெறுத்துத் தனது பெருஞ் செல்வமெல்லாவற்றையும் தானம் செய்துவிட்டு, ஆசீவகத்தையும்பின்பற்றி துறவுபூண்டதாகத் தெரியவருகிறது.
.
சமணத்தில் உள்ள ஜைன நெறி மட்டுமே காப்பியங்கள் மூலம் தன்னை மக்களிடம் ஓரளவிற்கு நிலைநிறுத்திக் கொண்டதனால், சமணத்தில் உள்ள ஜைன நெறியைத் தவிற மற்ற நெறிகள், தங்கள் செல்வாக்கை மக்களிடம் நாளடைவில் இழந்துவிட்டன.
இதனாலும், பிற்காலத்தில் ஆசீவகம் ஜைனத்தின் உட்பிரிவு எனுமொரு தவறான கண்ணோட்டம் உருவானதாலும் தற்காலத்தில் சமணம் எனும் சொல்லிற்கு ஜைனம் என்ற தவறான பொருள் உருவாகிவிட்டது.

இந்தக் குழப்பத்தினால், இன்றுவரை, தமிழ் இலக்கியங்களின் ஆய்வுகள் மற்றும் தொல்லியல் ஆய்வுகளில், சமணர் மற்றும் ஜைனர் ஆகிய சொற்கள், ஒரேப் பொருள் கொண்ட சொற்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

திவாகர நிகண்டு, பிங்கல நிகண்டு ஆகிய தமிழ் மொழி நிகண்டுகள் மட்டுமல்லாது,

கி.மு. 3ஆம் நூற்றாண்டு காலத்தின் அசோகரின் கல்வெட்டுகளில் மற்றும்
பௌத்தர்களின் நெறி நூலான மஜ்ஹிமா நிகாயம் எனும் நூலிலும்
கி.பி. 2ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பௌத்தர்களின் நூலான அசோகவதனம்
என்ற நூல் ,
கி.பி. 2ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் சீத்தலைசாத்தனார் இயற்றிய ஜைனக் காப்பியம் மணிமேகலை
கி.பி. 10ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட ஜைனர்களின் ஐஞ்சிறுங்காப்பியங்களுள் ஒன்றான நீலகேசி

கி.பி. 12ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் பெரியபுராணம்ஆகிய
ஆகிய இலக்கியச் சான்றுகள்,மற்றும் கல்வெட்டு களில் ஆசீவக நெறியையும் ஜைன நெறியையும் பிரித்துக் காட்டுகின்றன.

பிறகு, கி.பி. 13ஆம் நூற்றாண்டு வாக்கில் ஆசீவக நெறி ஜைன நெறியின் உட்பிரிவு எனும் தவறான ஒரு கண்ணோட்டம் உருவானது.

இதற்கான சான்றாக,கி.பி. 13ஆம் நூற்றாண்டில் அருணந்தி சிவாச்சாரியாரால் இயற்றப்பட்ட சிவஞான சித்தியார்துவங்குகிறது இந்தத் தவறான கண்ணோட்டத்தினை மயிலை திரு.சீனி. வேங்கடசாமி அவர்கள், தான் இயற்றிய பௌத்தமும் தமிழும் எனும் நூலில் குறிப்பிடுகிறார்.[25]

மேலும் சில வரலாற்று செய்திகளைப்பார்த்துவிட்டு பிறகு
மற்ற செய்திகளைப்பார்களாம்
ஆசிவகம் அசோகர் புத்தமதத்தைத் தழுவி அதை பரவச செய்ததற்கு முன்பே ,
அவரது தந்தையின் காலத்திலேயே சிறப்புற விளங்கியதற்கு ஆதாரங்கள் உள்ளது
.
மேலும் அசோகரின் கல்வெட்டுகளுள் ஒன்றில் ஆசீவக நெறி பற்றி சில செய்திகள் உள்ளன.

Ashoka (273–232 BCE), the grandson of Chandragupta was inspired by buddhist ideologies. There is a reference to Aaseevagar(Ajivikas) in the eddicts of Ashoka where the duties of dhammamahatma (law-authorities) are dealt with. The inscription reads:

“ Piyadasi, who is loved by the gods spoke thus: My supervisors of law are dealing with many connected with mercy, also with those which concern the ascetics and those which concern the house holders. They deal with the religious brotherhoods as well. I have made arrangements so that they will deal with the matter of Sangha (of the Buddhist community); similarly, I have made arrangements so they will deal with the Brahmans and also with the Ajivikas; I have also made arrangements that they deal with the Niganthas (Jainas); I have made arrangements so that they will deal with (all) the religious brotherhoods

கி.பி. 2ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பௌத்தர்களின் நூலான அசோகவதனம் எனும் நூலில் ஆசீவக நெறி பற்றி சில குறிப்புகள் உள்ளன.

“ There was no Buddhist king anywhere in India who persecuted the Jains or the Ajivikas or any other sect.(The Ashokavadana, p.xxxviii – A A.D.2nd century Buddhism Text)[16] – Differentiates Buddhists, Jains and Ajivikas as different religion. ”

சீத்தலைசாத்தனார் என்பவரால் இயற்றப்பட்ட மணிமேகலை எனும் காப்பியத்தில் சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை – எனும் காதையில் உள்ளப் பாடலில் அக்காலத்தில் தமிழகத்தில் இருந்த ஆறு வகையான மதங்களில் ஆசீவக நெறியும் ஒன்றாகக் காட்டப்பட்டுள்ளது. ஆசீவக நெறியின் கோட்பாடுகளையும் இக்காப்பியம் விளக்குகிறது.

கி.பி. 6ஆம் நூற்றாண்டிற்கு பின் இயற்றப்பட்ட ஜைனர்களின் காப்பியமான நீலகேசி எனும் காப்பியத்தில் ஆசீவகவாதச் சருக்கம் என்ற சருக்கத்தில் ஆசீவக நெறியின் கோட்பாடுகள் பற்றி பல செய்திகள் உள்ளன.

தமிழ் ஆய்வுலகில் அமணர் ஜைனர் பற்றிய பொருள் குழப்பம் நெடுங்காலமாகத் தொடர்ந்து வருகிறது. சமணர் என்ற சொல் அமணர் என்ற தமிழ் வடிவத்தின் திரிபாகும். இச்சொல் வைதீக எதிர்ப்பாளர் என்ற பொருளில் ஆளப்பட்டாலும் தமிழ் இலக்கியங்களில் இச்சொல் ஆசீவகர்களை மட்டுமே குறித்துள்ளது.

ஆசீவகர்களை அமணர்கள் என்றும் சைனர்களை அருகர்கள் என்றும் பெரிய புராணம்(பன்னிரெண்டாம் நூற்றாண்டு) இவ்விருவரையும் வேறுபடுத்திக் காட்டுகின்றது.
அத்துடன் ஆசீவகர்களை அமணர்கள் என்றும் சைனர்களைச் சாதி அமணர் என்றும் பிரித்து அடையாளப் படுத்தும். இப்படிப் பெரிய புராணம் ஆசீவகர்களையும் சைனர்களையும் வேறுபடுத்திக் காட்டுவதை முதன்முதலாக ஆராய்ந்து உரைத்தவர் பேரா. முனைவர் தே. வே. மகாலிங்கம்ஆவார்.
இன்னமும் பல செய்திகளை அடுத்தப்பகுதியில் காணலாம் .

அண்ணாமலை சுகுமாரன்

Comment here