சம்பா பயிருக்கு வீராணம் தண்ணீர் – விவசாயிகள் மகிழ்ச்சி

Rate this post

x

கடலூர் மாவட்டம், சிதம்பரதை அடுத்த  காடுமன்னர்கோயில் பகுதியில் வீராணாம் ஏரி முழு கொள்ளளவில் கடல் போல் உள்ளது. தொடர்ந்து 20 நாட்களாக முழு கொள்ளளவில் இருப்பது இதுவே முதல் முறை ஆகும

.

 

மேட்டூரில் இருந்து ஜுலைமாதம் 19ம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.  கல்லணை வழியாக வந்த தண்ணீர் ஜீலை 26ம் தேதி இரவு கீழணை வந்து சேர்ந்த்து.

ஒரே சமயத்தில் 45 ஆயிரம் கன அடி தண்ணீர் கீழணைக்கு வந்தத்தால் அடுத்த ஒரு மணி நேரத்தில் கீழணை நிரம்பியது.  பின்னர் பாதுகாப்பு கருதி கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டது.  அதே சமயம் வடவாறு மூலம் வீராணம் ஏரிக்கும் திறக்கப்பட்டு, தன்ணீர் தேக்கும் பணி துவங்கியது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி வீரானம் ஏரி நிரம்பியது.  அன்று முதல் தொடர்ந்து வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் பணி துவங்கியது.  அதுமட்டுமின்றி 30 ஆண்டுகளுக்கு பின்பு, முதல் முறையாக வீராணம் ஏரியில் இருந்து வாலாஜா மற்றும் பெருமாள் ஏரிக்கும் தண்ணீர் அனுப்பும் பணியும் துவங்கி அந்த ஏரிகளுக்கும் தண்ணீர் நிரப்பப்பட்டது.

தொடர்ந்து ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டதாலும், மழை குறைவு காரனமாகவும் இடையே ஏரியின் நீர் மட்டம் குறைந்த்து.  அதன் பின்னர், காவிரி நீர் பிடிப்பில் மழை காரனமாக மீண்டும் ஏரியின் நீர் மட்டம் உயர்த்தப்பட்டு, ஏரி கடந்த மாதம் 28ம் தேதி முழு கொள்ளளவை எட்டியது.

அன்று முதல் இன்று வரை தொடர்ந்து 20 நாட்களாக ஏரி முழு கொள்ளளவான 1465 மில்லியன் கன அடியில் 1400 மில்லியன் கன அடி நிரம்பி கடல் போல் காட்சியளிக்கிறது.

அதே வேளையில் சென்னைக்கு 74 கன ஆடியும், ஏரியில் இருந்து பாசனத்திற்கு 183 கன அடியும், வி.என்.எஸ்., மதகு வழியாக 250 கன அடியும் வெளியேற்றப்பட்டு வருகிறது..  20 நாட்களாக தொடர்ந்து வீராணம் ஏரி முழு கொள்ளளவில் இருப்பது இதுவே முதல் முறை என பொதுப்பணிதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால் விவசாயிகல் சம்பா பருவத்திற்கு இறுதி வரை தடையின்றி தண்ணீர் கீடைக்கும் என்ற நம் பிக்கையில் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*