தமிழகம்தொழில்

சரஸ்வதி மஹால் நூலகத்தில் தமிழ் ஓலைச்சுவடி பயிற்சி

தஞ்சாவூர் :

தஞ்சை சரஸ்வதி மஹால் நுாலகத்தில், தமிழ்ச் சுவடியியல் பயிற்சி வகுப்பு, ஜூலை மாதம், 8ம் தேதி துவங்கி, 28ம் தேதி வரை நடக்கிறது.

பதிப்பிக்கப்படாத தமிழ்ச்சுவடிகளைப் பதிப்பிக்கவும், பதிப்பிக்கப் பெற்ற நுால்களை மீளாய்வு செய்வதும், இந்த பயிற்சியின் நோக்கம். பனை ஓலைகளில் எழுதுவதற்கும், பயிற்சி பெறுவோருக்கும் உரிய பாடநுால், எழுது பொருட்கள் ஆகியவை வழங்கப்படும். தமிழில் முதுகலை பட்டம் பெற்றவர்கள், சித்த மருத்துவத்தில் பட்டம் பெற்றவர்கள், ஜோதிடவியலில் பட்டம் பெற்றவர்கள் இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். 45 வயதிற்குள் இருக்க வேண்டும். பயிற்சி கட்டணம், ௧௦௦ ரூபாய். பயிற்சியில் சேர விரும்புவோர், நூலகத்தின் வேலை நாட்களில் வந்து விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம் என, சரஸ்வதி மஹால் நுாலக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Comment here