Sliderசினிமா

சர்க்கார் படம் எதை வைத்து எடுக்கப்பட்டது

Rate this post

 

பொதுவாக படங்களைப் பற்றிய விமர்சனங்களை நான் பதிவு செய்வது இல்லை.

காரணம் படத்தின் வசூலில் பாதிப்புகள் வரக்கூடாது என்று.

ஆனால் சர்கார் படத்தைப் பற்றி தற்போது எழுத இரண்டு காரணங்கள்.

ஒன்று ” இந்த படத்திற்காகவா இவ்வளவு பிரச்சினைகள் ” என்பது..

இரண்டு ” படம் பல கோடிகள் வசூல் சாதனை செய்துள்ளதாக வந்த தகவல்கள் ”

ஆகவே இந்த விமர்சனங்கள் பாதிக்காது என்று நம்புகிறேன்.

சர்கார் !

விஜய் சிறந்த நடிகர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

இதிலும் சிறப்பாக நடித்து இருக்கிறார். ஆனால் பல இடங்களில் ஓவர் ஆக்டிங்கை தவிர்த்து இருக்க வேண்டும்.

படத்தில் நகைச்சுவை காட்சிகள் இல்லாத குறையை சண்டைக் காட்சிகள் ஈடு செய்து உள்ளது.

என்னதான் ஹூரோன்னாலும் ஒரு ஞயாயம் வேண்டாமா ?

சினிமாவில் வரும் தலைவனுக்கும் நிஜத்தில் வரும் தலைவனுக்கும் வித்யாசங்கள் உண்டு.

எல்லாரையும் அடிச்சி சாகடித்தால் அவன் சினிமா ஹீரோ !

எல்லோருக்காகவும் தன் உயிரை இழந்தால் அவனே நிஜ ஹீரோ !

உண்மையான புரட்சி என்பது மக்களுக்கு தங்களுடைய நிலையை உணர்த்தி, பாதிக்கப்பட்ட மக்களை தங்களை சுரண்டி பிழைக்கும் வர்கத்திற்கு எதிராக மக்களே போராடும் நிலையை உருவாக்குவதே !
தனி மனித போராட்டமோ, துதி பாடுவதோ அல்ல.

சாவித்திரி வேடத்தில் நடித்து பெயர் பெற்ற கீர்த்தி சுரேஷ்க்கு இது ஒரு சாதாரண வேடம்.

முதல் உலகப்போர் மற்றும் இரண்டாம் உலகப் போர் ஆகிய புத்தகங்களை படித்த ஒருவன் எனக்கு போர்களைப் பற்றி எல்லாம் தெரியும் என்று ஆயுதங்களுடன் போருக்கு செல்வது எப்படியோ, அப்படித்தான் எந்த தகவல்களையும் முழுமையாகவும், தெளிவாகவும் தெரிந்து கொள்ளாமல் இப்படி ஒரு படத்தை எடுத்து இருக்கின்றார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.

சுகாதாரத் துறைக்கும் பொதுப்பணித்துறைக்கும் வித்யாசம் தெரியாத நிலை.

ஜெயலலிதா அவர்களின் பெயரை ( கோமலவள்ளி )பயண்படுத்தியது போல கலைஞர் அவர்களுடைய உண்மையான பெயரை ( தட்சணாமூர்த்தி ) பயன்படுத்தாமல் போனதும், இலவச டிவியை உடைக்காமல் விட்டதும் நடுநிலையான படைப்பாக ஏற்க்க முடியுமா ?

மாற்றத்தை உருவாக்க நினைக்கும், ஊழலை எதிர்த்து குரல் கொடுக்கும், ஒரு விரல் புரட்சியை சொல்லும், மக்களின் உரிமையைச் சொல்லும் இப்படத்தை நான் ஒரு டிக்கட் 208 ரூபாய் ( பார்கிங், பாப்கார்ன் தனி ) கொடுத்து பார்த்தேன்.

இந்த கதையை பாக்யராஜ் சார் படம் வெளியாகும் முன்பே வெளியே சொல்லிட்டாருன்னு கலாட்டா செய்த சம்பவங்கள் நகைச்சுவையின் உச்சகட்டம்.

ஒருவருடைய கதையைத்தான் நாம் எடுக்கின்றோம் என்று யாரும் சொல்லிவிடக் கூடாது என்றும், ஒரே படத்தில் எல்லா சம்பவங்களையும் கொண்டு வர வேண்டும் என்றும் நினைத்து நன்றாக எடுத்து வெளியிட வேண்டிய படத்தை நிறைவாக எடுக்க முடியவில்லை என்றே தோன்றுகிறது.

வாட்ஸ்அப், பேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றில் வரும் தகவல்களையும், சமூக வலைதளங்களில் வலம் வரும் போராளிகளை கதாபாத்திரத்தில் இணைத்து கொண்டதும், கொஞ்சமும் லாஜிக்கே இல்லாத சில காட்சிகளும் படத்திற்கு மைனஸ்.

எதிர்கட்சியும் ஆளும் கட்சியும் இனையும் மாநாட்டு சீன் ஒரு முக்கிய உதாரணமாகும்.

இராமேஸ்வரம் பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பத்தில் இருந்து வெளிநாடு சென்று வருடத்திற்கு 1800 கோடிகள் சம்பாதிக்கும் கதாநாயகன் ( விஜய் ) தான் சார்ந்த மீனவ மக்களுக்கோ, தன்னை படிக்க வைத்த மீனவ சங்கங்களுக்கோ, இல்லை யாருக்காவது ஏதாவது உதவி செய்தது உண்டா ?

மக்களுக்கு கிடைத்த இலவசங்களை தூக்கிப் போட்டு உடைத்தது மட்டுமே மிச்சம்.

பாதிக்கப்பட்ட மக்களை ஒரு பெரிய தனியார் மருத்துவமனையில் கூட சேர்க்க வசதி இல்லையா ?

அவருடைய குடும்ப உறுப்பினர்களை அழகான மீனவ குடும்பமாக காட்டிய முருகதாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

ஒரு NRI தபாலிலேயே ஓட்டு போடலாம். அதற்காக சொந்த நாட்டிற்கு வர வேண்டிய அவசியம் இல்லை. இவர் ஏன் வந்தார் என்பது ஒரு பெரிய கேள்விக்குறியாக இருக்கும் என்பதால் அதற்கு அவர் அப்பாவைப் பற்றி ஒரு கதை.

படத்தில் பழ கருப்பைய்யாவால் கொலை செய்யப்படும் நிருபர் பற்றி பல நாட்கள் ஆகியும் காவல்துறையோ, குடும்பத்தினர்களோ கவலைப்பட்டதாக தெரியவில்லை.

உலக அளவில் உள்ள ஒரு பணக்காரனுக்கு தேர்தலுக்காக ஒரு அலுவலகத்தை வாடகைக் எடுக்க முடியாதா ?

இவர் கூட ஏழைகளின் வீட்டைத்தான் காலி செய்வாரா ?

குறைந்த பட்சம் அவருடைய வீட்டையாவது பயண்படுத்தி இருக்கலாம். அதில் வாழ்ந்து வரும் தன்னுடைய மீனவ குடும்பத்தை வேறு இடத்தில் தங்க வைத்து இருக்கலாம்.

மொத்த அரசியலும் ஐயோத்தி குப்பத்திலேயே முடிந்து விட்டது.

இப்படி பலவற்றை சொல்லிக் கொண்டே போகலாம்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்தில் கரையை கடக்கவில்லை என்பது ஆச்சர்யம்.

ஒருவிரல் புரட்சி பாடல் தவிர மற்ற பாடல்கள் சுமார்தான்.

விஜய் – ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் உருவான பாடல்களின் வெற்றியை நாம் ஒப்பிட்டு பார்க்கவும்.

மொத்தத்தில் படத்தைவிட சர்கார் பாடல்கள் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது அருமையாக இருந்தது. பலருக்கு நம்பிக்கை விதைப்பதாக இருந்தது. ஆனால் அது படம் வெளியாகி கொஞ்சம் யோசிக்க செய்துள்ளது.

முருகதாஸ் அவர்களின் படங்களான ரமனா, கத்தி, துப்பாக்கி அளவிற்கு சர்கார் இல்லை என்பதே உண்மை.

இந்தப்படப் பிரச்சனையில் இயக்குநர் கே.பாக்யராஜ் அவர்கள் தலையிட்டு மன உளைச்சல் அடைந்து, தன்னுடைய தலைவர் பதவியை இழந்தது மட்டுமே மிச்சம்.

டி.எஸ்.ஆர்.சுபாஷ்
9444111494

🎬🎥🎬🎥🎬🎥🎬🎥🎬

Comment here