சர்வதேச செவிலியர் தினம்! – இந்தியாவில் கொண்டாட்டம்!-

Rate this post

செவிலியர்கள் (நர்ஸ்) ஆற்றி வரும் உன்னத தொண்டை உலகிற்கு உணர்த்தும் வகையில், சர்வதேச செவிலியர் தினம் (International Nurses Day ) ஆண்டுதோறும் மே 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒரு மருத்துவமனையின் இன்றியமையாத ஊழியர்கள் “செவிலியர்கள்” என்பது எல்லோரும் ஒத்துக்கொள்ளும் ஒரு விஷயம். 1965-ம் ஆண்டிலிருந்து உலக செவிலியர் அமைப்பு (ICN – International Council of Nurses )இந்த தினத்தை அனுசரித்து வருகிறது.

1974-ம் ஆண்டு ஜனவரி மாதம் நவீன செவிலியர் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் (Florence Nightingale) பிறந்த நாளான மே 12 ஆம் தேதியை, சிறப்பாக நினைவு கூற முடிவு செய்யப்பட்டது. அன்றைய தினத்தை நாளை சர்வதேச செவிலியர் தினமாக அனுசரிக்க முடிவு செய்யப்பட்டது.

இங்கிலாந்தில் ஆண்டு தோறும் மே 12-ம் தேதி லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் (Westminster Abbey) சம்பிரதாயப்பூர்வமாக இந்தத் தினம் கொண்டாடப்படுகிறது. இங்குள்ள செவிலியர் மூலம் மாளிகையில் உள்ள விளக்கு ஏற்றப்பட்டு அங்கு வருகைதரும் செவிலியர்கள் ஒவ்வொருவராலும் கைமாறப்பட்டு பின்னர் அது அங்குள்ள உயர்ந்த பீடத்தில் வைக்கப்படும்.இது ஒரு செவிலியரில் இருந்து மற்றொருவருக்கு தமது அறிவைப் பரிமாறப்படுவதைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.

அதையொட்டி சிறப்பாக மருத்துவ சேவை புரியும் செவிலியர்களுக்கு மத்திய அரசு சார்பில் மதிப்புமிக்க ‘பிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது’ வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச செவிலியர் தினமான மே 12-ம் தேதி ஜனாதிபதி மாளிகையில் விருது வழங்கும் விழா நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டுக்கான விருது பெற விரும்புவோரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, 35 நர்சுகள் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்றது. விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா ஆகியோர் விருதுகளை வழங்கி வாழ்த்தினார்கள். நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசும்போது, செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தங்கள் துறையில் அளித்து வரும் பங்களிப்பை வெகுவாகப் பாராட்டினார். மேலும், நர்சிங் துறையை மேலும் வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*