வேளாண்மை

சர் ஹென்றி நிக்கலஸ் ரிட்லி

‘ரப்பர் ரிட்லி’ என்று அன்பாக அழைக்கப்படும் சர் ஹென்றி நிக்கலஸ் ரிட்லி, இங்கிலாந்தில் உள்ள நார்போல்க் எனும் இடத்தில் 10 டிசம்பர் 1885 ஆம் தேதி பிறந்தார்.

1877ஆம் ஆண்டு அறிவியல் துறையில் ஆக்ஸ்பர்ட் பல்கலைக்கழகத்தில் இருந்து சிறப்புப் பட்டம் பெற்றார். பின்னர் பிரித்தானிய அரும்பொருள் காப்பகத்தில் ஓர் உதவியாளராகப் பணிபுரிந்தார். அதே ஆண்டு பிரேசில் நாட்டிற்குச் சென்று தாவர ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். 1888ஆம் ஆண்டு சிங்கப்பூரின் தாவரவியல் பூங்காவிற்கு இயக்குநராக அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு பணி புரியும் போது ரப்பர் மரங்களின் தாவரப் பயன்பாடுகள் மலாயா, சிங்கப்பூருக்கு பிரகாசமான எதிர்காலத்தைக் கொண்டு வரும் என்பதை உணர்ந்தார். ஆகவே, மலாயாத் தொடுவாய் நிலப்பகுதிகளில் ரப்பர் மரங்களை நட வேண்டும் என்று பிரசாரம் செய்தார்.

ரிட்லி போகின்ற இடங்களுக்கு எல்லாம் ரப்பர் கொட்டைகளை எடுத்துச் செல்வார். அங்கு உள்ளவர்களிடம் அந்தக் கொட்டைகளைக் கொடுத்து பயிர் செய்யச் சொல்வார்.

முதன்முதலாக 22 ரப்பர் கன்றுகள் சிங்கப்பூருக்கு இலங்கையில் இருந்து கொண்டு வரப்பட்டன.சிங்கப்பூரில் இருந்து ஒன்பது கன்றுகளை ரிட்லி 1877-இல் மலாயாவுக்கு கொண்டு வந்தார். அந்தக் கன்றுகள் பேராக் மாநிலத்தில் உள்ள கோலாகங்சாரில் நடப்பட்டன. கொண்டு வரப்பட்ட கன்றுகளில் எட்டு கன்றுகள் இறந்துவிட்டன. எஞ்சிய 13 கன்றுகள் சிங்கப்பூரில் நடப்பட்டன.

அவற்றில் இரண்டு கன்றுகள் மட்டுமே பிழைத்தன. அந்த இரண்டும் பெரிய மரங்களாகி சிங்கப்பூரியர்களுக்கு காட்சி பொருளாக அமைகின்றன. ஒரு மரம் சுவான் ஹோ ஜப்பானிய நல்லடக்கப் பூங்காவில் இருக்கிறது. இன்னும் ஒன்று சிங்கப்பூர் தாவரவியல் பூங்காவில் இருக்கிறது. அவற்றின் வயது 135.

ஒரே ஒரு கன்றுதான் பிழைத்துக் கொண்டது. அந்தக் கன்று பெரிதாகி மரம் ஆனபிறகு அதன் விதைகள் எடுக்கப்பட்டு மலாயாவின் மற்ற பகுதிகளில் நடப்பட்டன. அந்த ஒரே ஒரு மரத்தின் மூலமாகத் தான் மற்ற கன்றுகள் உருவாகின. அந்தக் கன்றுகள் ஒட்டுக் கட்டப்பட்டு புதிய வகை கன்றுகள் உருவாக்கப் பட்டன. இதைத் தொடர்ந்து, 1898-இல் முதல் ரப்பர் தோட்டம் மலாயாவில் உருவானது. அதன் பின்னர் உலகத்திலேயே அதிகமான ரப்பரை உற்பத்தி செய்த நாடாக மலாயா உருவானது.

மலாயாவுக்கு கொண்டு வரப்பட்ட ஒன்பது கன்றுகளில் எஞ்சிய ஒரே ஒரு கன்று வளர்ந்து பெரிய மரமாகி இன்னும் கோலாகங்சாரில் மலேசிய மக்களுக்கும் உலக மக்களுக்கும் காட்சிப் பொருளாக உள்ளது. கோலா கங்சார் கூட்டரசு நிலச் சுரங்கர அலுவலகத்திற்கு முன்பாக அந்த மரம் இருக்கிறது. இப்போது அந்த மரத்திற்கு வயது 135 ஆகின்றது.

Comment here