சம்பவம்

சாலையை ஆய்வு செய்ய சென்ற அதிகாரி மீது சகதியை ஊற்றிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.

Rate this post

மராட்டிய மாநிலம் கங்காவேலி பாலம் அருகே மும்பை-கோவா சாலையில் உள்ள பள்ளங்களை ஆய்வு செய்வதற்காக நெடுஞ்சாலைத்துறையின் எஞ்ஜினியர் பிரகாஷ் சேதேகா சென்றுள்ளார். அப்போது அவருடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ. நிதிஷ் ரானே வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அவருடைய ஆதரவாளர்களும் மோதல் போக்கை மேற்கொண்டுள்ளனர். அப்போது அங்கே ஏற்கனவே பக்கெட்களில் தயாராக வைக்கப்பட்டிருந்த சகதி நீர் எடுத்துவரப்பட்டு அதிகாரியின் மீது ஊற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து அதிகாரியை அவர்கள் பாலத்தில் கட்டிவைக்கவும் முயற்சி செய்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ வைரலாக பரவி வருகிறது.

நிதிஷ் ரானே முன்னாள் மராட்டிய முதல்வர் நாராயண் ரானேவின் மகன் ஆவார். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரியை பாரதீய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் கைலாஷ் வர்கியாவின் மகனும், அதே கட்சியின் எம்.எல்.ஏ.வுமான விஜய் வர்கியாவும் தாக்கிய விவகாரம் சமீபத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்போது அதுபோன்றதொரு சம்பவம் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.வால் நடத்தப்பட்டுள்ளது.

Comment here