தமிழகம்

சிங்கப்பூர் சென்ற விமானம் சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கம்

Rate this post

சென்னை,

திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு இன்று காலை தனியார் விமானம் புறப்பட்டுச் சென்றது. இந்த விமானத்தில் 165 பயணிகள் உட்பட 172 பேர் இருந்தனர். விமானம் சென்னையை நெருங்கியபோது எஞ்சினில் இருந்து தீப்பொறி எழுந்தது. இதனால் விமானத்தை சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க அனுமதி கோரப்பட்டது.

விமானத்தை தரையிறக்க சென்னை விமான நிலையம் அனுமதி அளித்ததையடுத்து, சென்னை விமான நிலையத்தில் அதிகாலை 3.40 மணியளவில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. விமானத்தில் ஏற்பட்ட கோளாறு உரிய நேரத்தில் கண்டறியப்பட்டு தரையிறக்கப்பட்டதால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

Comment here