Sliderகல்வி

சிங்காரவேலர்

சென்ற நூற்றாண்டில் 1900 வாக்கில் சிந்தனை சிறபி என்று அழைக்கப்பட்டு மக்களால் போற்றப்பட்டவர் மதிப்பிற்குரிய ம. சிங்காரவேலர் ஆகும் .இந்திய பொதுவுடைமை இயக்கத்தின் தந்தையாக கருதப்படும் சிங்காரவேலர் இந்திய தொழிற்சங்க இயக்கத்தின் தந்தையாகவும், விஞ்ஞானப் பகுத்தறிவு பயிலும் சமத்துவத்தின் தந்தையாகவும் விளங்கினார். இவர் தமிழ் மொழிக்காகப் பெரிதும் பாடுபட்டார். தமிழை ஆட்சி மொழியாக்கும் கோரிக்கையை அப்போதே வலியுறுத்தியாவர்

சென்னையில் பிற்படுத்தப்பட்ட மீனவர் குடும்பத்தில் பிறந்தார் .1860 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் நாள் வெங்கடாசலம் செட்டி, வள்ளியம்மை ஆகியோருக்கு 3வது மகனாக பிறந்தார்
பள்ளிக் கல்வியை முடித்த பின் மாநிலக் கல்லூரியில் பட்டம் பெற்றார். தன் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒடுக்கப்பட்ட நிலையில் இருப்பதைக் கண்டு சிறுவயது முதலே மனம் வருந்தினார். மீனவக்குலத்தைச் சேர்ந்தவர் என்பதால் நீதிமன்றத்தில் எதிர்தரப்பு வக்கீலால் அவமானப்படுத்தப்பட்டபோது, அந்த வழக்கை வென்றுவிட்டு வெளியே வந்து, தன் கருப்பு அங்கியைக் களைந்து இனி நீதிமன்றத்துக்கு வரப்போவதில்லை என்றும், என் மக்களுக்காகவே பாடுபடுவேன் என்றும் உறுதி எடுத்தார் .

 1. பல்வேறு தொழிலாளர் போராட்டங்களில் பங்கேற்ற இந்தியாவின் முதல் தொழிலாளர் தலைவர்.
 2. 1923ல் தொழிலாளர் தினம் (மே தினம்) கொண்டாடியதன் மூலம், மேதினம் கொண்டாடிய முதல் இந்தியர் இவரேஆவார் இந்தியாமட்டுமலல்ல ஆசியாவிலேயே முதலாவதும் ஆகும்
 3. 1923 மே மாதத்தில் தொழிலாளர் விவசாய கட்சியை தொடங்கினார்.
 4. பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தை செயல்படுத்தியதிலும் அவரே முன்னோடி. 1925ல் சென்னை மாமன்றத்தின் உறுப்பினராக தேர்வு பெற்றபின்அப்போது இந்த திட்டத்தைஅவரது பகுதியில் துவக்கினார்.
 5. தொழிலாளர் நலனுக்காக, “தொழிலாளர்’’, “லேபர் கிசான்’’ ஆகிய 2 பத்திரிகைகளை தொடங்கினார்.
  வி.ஷி.வி ரயில்வே தொழிலாளர் சங்கம், நாகப்பட்டினம் ரயில்வே தொழிலாளர் சங்கம், கோயம்புத்தூர் தொழிலாளர் சங்கம் ஆகிய சங்கங்களை உருவாக்கியவரும் இவரே. இந்திய தேசிய காங்கிரஸ் கயாவில் கூடியபோது, உலகத்தின் நலத்தில் ஈடுபாடு கொண்ட வெகுஜன அமைப்பின் பிரதிநிதியாகவே அவர் பங்கேற்றார். தொழிலாளர் சட்டங்கள் தேவை என்பதற்காக பேசிய அவர், காங்கிரஸ் இயக்கத்தின் ஒரு பகுதியாகவே தொழிலாளர் இயக்கமும் உள்ளது என கருதினார். விடுதலைப் போராளி மகாத்மா காந்தியின் தலைமையை ஏற்றுக் கொண்ட சிங்காரவேலர் தமிழகத்தில் பிரசிடென்ஸி காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரானார்.
  . தமிழ், ஆங்கிலம், இந்தி, உருது, பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளை அறிந்திருந்தார். வாசிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
  பலவகை சிந்தனை மரபு நூல்களை எழுதியுள்ளார். மேலும் பல நூல்களை வேறு மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்.
  இவர் எழுதிய சிந்தனை நூல்கள் மாஸ்கோ நகர் லெனின் நூலகத்தில் இடம் பெற்றுள்ளன. இவருடைய நூல்கள் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. மிகப்பெரிய செல்வந்தராக விளங்கியவர் , மக்கள் பணிக்காக பெருஞ்செல்வத்தைத்துறந்தவர்
  இன்றைய வெலிங்டன் சீமாட்டி கல்வி வளாகத்தில்தான் அவர்பிறந்த வீடு இருந்தது . .அவர் இருந்த குடியிருப்பு வளாகத்தை அவரதுகான்பூர் சதி வழக்கில் கைதுக்குப் பிறகு அன்றைய ஆளுநர் வெலிங்டன் பிரபு கைப்பற்றி, அந்த இடத்தில் கல்வி நிலையத்தை நிறுவி, தனது மனைவியின் பெயரை வைத்துக்கொண்டார் .என்றுகூறப்படுகிறது .

முனைவர் வீரராகவன் என்பவர் சிங்காரவேலருடைய அரசியல் மற்றும் தொழிற்சங்கப் பங்கைப் பற்றித் தனது ஆராய்ச்சிக் கட்டுரையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:

“புரட்சிகரத் தொழிலாளர் இயக்கத்தின் கொள்கை களை ஆதரித்த தொடக்ககால முக்கிய தலைவர் களில் ஒருவராக இருந்தவர் சிங்காரவேலு. சென்னையில் தொழிலாளர் நலனுக்காக அவர் ஆற்றிய பணிகள்பற்றி ஏற்கனவே குறிப்பிடப் பட்டுள்ளது. அவருக்கு 1922இல் பம்பாயைச் சேர்ந்த எஸ்.ஏ.டாங்கேயுடன் தொடர்பு ஏற்பட்டது. 1922இல் எம்.என்.ராய் வெளிப் படுத்திய திட்டத்தினால் கவரப்பட்டு அவருடன் தொடர்ந்து கடிதப் போக்குவரத்து வைத்துக் கொண்டிருந்தார். 1923இல் அவர் மே தினம் கொண்டாட இலேபர் கிசான் பார்ட்டி ஆஃப் இந்துஸ்தான், (இந்துஸ்தான் உழவர் உழைப்பாளர் கட்சி LKPH) என்கிற கட்சியைப் புரட்சிகர திட்டத்துடன் ஆரம்பித்தார். அவர் “லேபர் கிசான் கெஜட்” என்ற ஒரு வாரத்துக்கு ஒருமுறை வெளிவரும் ஆங்கில இதழையும், “தொழி லாளன்” என்ற தமிழ் வார இதழையும் ஆசிரியராக இருந்து பதிப்பித்து வெளியிட்டார். அவர் மார்ச் 1924இல் கான்பூர் போல்ஷ்விக் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர் நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டிருந்ததால் அவருக்கு எதிரான நடவடிக்கை கைவிடப் பட்டது. டிசம்பர் 1925இல் கான்பூரில் நடந்த கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாநாட்டுக்கு தலைமை வகித்தார். 1927இல் பெங்கால்-நாக்பூர் ரயில்வே வேலை நிறுத்தத்தில் தீவிரமாக ஈடுபட்டார். 1928இல் வரலாற்றுப் பெருமை வாய்ந்த தென்னிந்திய ரயில்வே வேலை நிறுத்தத்தை நடத்திய தலைவர்கள் மீது தொடரப்பட்ட சதி வழக்கில் அவருக்குப் பத்தாண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அந்த தண்டனை குறைக்கப்பட்டு ஆகஸ்டு 1930இல் விடுதலை செய்யப்பட்டார்”சென்னை நகரின் தொழிலாளர் போராட்டங் களிலும், தென்னிந்திய ரயில்வே போராட்டங் களிலும் மும்முரமாகப் பங்கேற்றதுடன், தனது பத்திரிகைகளிலும், செய்தித் தாள்களிலும் கட்டுரைகள் எழுதியும் பொதுக் கூட்டங்கள் நடத்தியும் ஓய்ச்சல் ஒழிவின்றி, கம்யூனிசப் பிரச்சாரம் செய்து வந்தார்.

ம. சிங்காரவேலர் சிந்தனை படைப்புகளின் பின்வருவன அடங்கும்:

உலகம் சுழன்று கொண்டே போகிறது
கடவுளும் பிரபஞ்சமும்;1934; குடிஅரசு புத்தகாலயம், ஈரோடு.
கல்மழை உண்டாகும் விதம்
கோழிமுட்டை வந்ததும் காணாமல் போனதும்
சமதர்ம உபன்யாசம்: தமிழ்மாகாண சமதர்ம மாநாட்டின் சமதர்ம உபன்யாசம்;1934; குடிஅரசு புத்தகாலயம், ஈரோடு. [9]
சுயராஜ்யம் யாருக்கு? பாகம் 1
சுயராஜ்யம் யாருக்கு? பாகம் 2
சுயராஜ்யம் யாருக்கு? பாகம் 3: எது வேண்டும்? சுயராஜ்யமா? சமதர்ம ராஜ்யமா?; 1934; சமதர்ம பிரசுராலயம், 22 சவுத்பீச் ரோடு, திருவல்லிக்கேணி, சென்னை.[10]
தத்துவஞான விஞ்ஞானக் குறிப்புகள் -பல பகுதிகள்
தத்துவ, விஞ்ஞான, பொருளாதாரக் குறிப்புகள்
நடத்தை என்ற நவீன ஆராய்ச்சி
பகுத்தறிவென்றால் என்ன?
பிரகிருத ஞானம்
பிரபஞ்சத் தற்காலப் பிரச்சினை
பிரபஞ்சத்தில் தற்காலப் பிரச்சினை
பிரபஞ்சப் பிரச்சினைகள்
பிரபஞ்சமும் நாமும்
பேய், பிசாசு
மனித உற்பவம்; 1934; சமதர்ம பிரசுராலயம், 22 சவுத்பீச் ரோடு, திருவல்லிக்கேணி, சென்னை.[11]
மனிதனும் பிரபஞ்சமும்
மனோ ஆலய உலகங்கள்
மெய்ஞ்ஞான முறையும் மூடநம்பிக்கையும் – பாகம் 1; 1934; பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம், ஈரோடு. [12]
மெய்ஞ்ஞான முறையும் மூடநம்பிக்கையும் – பாகம் 2; 1934; பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம், ஈரோடு.[13]
விஞ்ஞான முறையும் மூட நம்பிக்கையும்
விஞ்ஞானமும் மூடநம்பிக்கையும்
விஞ்ஞானத்தின் அவசியம்

ஒரு பக்கத்தில் மகாத்மா காந்தியுடைய சாத்வீகமும், சுயதொழில் கொள்கையும் அவர் ஏற்றுக்கொண்டார். இன்னொருபுறம் பொது வுடைமைக் கொள்கைகளும், தொழிற்சங்க இயக்கங் களும் அவருக்கு உடன்பாடு. வேறொரு முனையில் சமதர்மக் கருத்துகள் மட்டுமின்றிச் சாதி ஒழிப்பு மற்றும் சுயமரியாதைக் கொள்கையைப் பற்றியும் அவருக்கு சரியான புரிதலிருந்தது.
இறுதியில் 1945ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24ஆம் தேதி சென்னை அச்சு தொழிலாளர் மாநாட்டில் பங்கேற்றார். அதில் பேசிய பேச்சே அவரின் இறுதிப்பேச்சு.பக்கவாத நோயினால் பலமாத காலம் படுத்த படுக்கையாயிருந்த சிங்காரவேலர் 1946ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ஆம் தேதியன்று இயற்கை எய்தினார். இறுதியாய் அவரின் விருப்பப்படி 10ஆயிரம் நூல்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுவிடம் வழங்கப்பட்டது.

பொங்கிய சீர்திருத்தம் பொலிந்ததும் அவனால்
பொய்புரட் டறியாமை பொசிந்ததும் அவனால்
சங்கம் தொழிலாளர்க் கமைந்ததும் அவனால்
தமிழர்க்குப் புத்தெண்மை புகுந்ததும் அவனால்
மூலதனத்தின் பொருள் புரிந்ததும் அவனால்
புதுவுலகக்கனா முளைத்ததும் அவனால் என்கிறார் பாரதிதாசன்

இவர் வாழ்ந்த காலகட்டத்தில் எளிய பிற்பட்ட மீனவகுலத்தில் பிறந்த இவர் இத்தனைப்படித்ததும் , சிந்தித்ததும் ,உழைத்ததும் சீருடன் வாழ்ந்ததும் பலராலும் போற்றிப்புகழப்பட்டது நினைவு கூர்வோம் !
#அண்ணாமலை சுகுமாரன்

சிங்காரவேலர்

Comment here