கதை

சிட்டுக் குருவி – தமிழ் இலக்கியங்களில்

Rate this post

சிட்டுக்குருவியில் இரண்டு இனங்கள் உண்டு. சிட்டுக்குருவியைச் சிய்யான் குருவி என்றும் கூறுவர்.

ஊர்க்குருவி ஒன்று ஊர்க்குருவி.

இதனைச் சங்க இலக்கியங்கள் மனையுறைக் குரீஇ என்றும்,உள்ளுறைக் குரீஇ என்றும் உள்ளூர்க் குரீஇ என்றும்குறிப்பிடுகின்றன. இவை மக்களோடு பழகி வாழ்பவை. இதன் மற்றொரு வகை தூக்கணங்குருவி. இது மூங்கில் மரங்களிலும்,தென்னை மரங்களிலும்,கூடு கட்டிக்கொண்டு வாழ்பவை. மக்களோடு பழகாமல் காட்டுப்பகுதியில் வாழ்பவை. தினைப்புனம் காத்த மகளிர் இவற்றைத்தான் ஓட்டியதாகப் பாடல்கள் கூறுகின்றன. பழக்கப்பட்ட குருவிகள் பழக்கப்பட்ட குருவிகள் பறம்புமலையை மூவேந்தர்கள் முற்றுகை இட்டிருந்தபோது நெற்கதிர்களைக் கொண்டுவந்து பாரி வள்ளலின் குடும்பத்தின் பசியைப் போக்கியதாக ஒரு பாடல் தெரிவிக்கிறது.

குருவி வகைகள் க்கான பட முடிவு

நிறம் இந்தக் குருவியின் நிறம் பற்றிய குறிப்புகளும் உள்ளன, குருவியின் நிறம் பூளாப் பூ போன்ற வெண்மை. ஆண்குருவியின் கழுத்து கருநிறம். தூக்கணங்குருவிக் கூடு தூக்கணங்குருவியின் கூடு வளைந்த வாயில்களை உடையது என்றும், உயர்ந்த மரங்களில் தொங்கும் என்றும் சங்கப்பாடல்கள் குறிப்பிடுகின்றன. பொதுக்குறிப்பு தமிழ் இலக்கியங்களில் சிட்டுக் குருவியைப் பற்றி பல செய்திகள் காணக்கிடக்கின்றன. சிலப்பதிகாரத்தில் ‘குருவி ஒப்பியும் கிளி கடிந்து குன்றத்து’ என்று குன்றக் குரவையில் மலை மேல் திரிந்த குருவியையும் கிளியையும் இளங்கோவடிகள் பாடியுள்ளார். புறாநானூற்றில் உள்ள குரீஇ என்ற சொல்லே மருவி குருவி என்றானது என்பர்.

“குன்றத்து இருந்த குரீஇ இனம் போல் ”

என்ற புறநானூற்றுப் பாடலிலும் “மனையுறை குரீஇக் களை கனல் சேவல்” என்ற பாடலிலும் கழுத்தில் கறுப்பினை உடைய ஆண்குருவி, வீட்டிலேயே செல்லப் பறவையாக வாழ்வதைக் கூறுகிறது.

“தூக்கலாம் குரீஇத் தூங்கு கூடு”

என்ற புற நானூற்றுப் பாடலிலும் தூக்கணாங்குருவியையும் அதன் கூட்டையும் சுட்டுகிறது.

” எண்ணரும் குன்றில் குரீஇ இனம் போன்றனவே”

என்ற களவழி நாற்பதும் (பாடல் 8) யானைமேல் தைத்த அம்புகளுக்கு, மலை மீது தங்கிய குருவிகள் உவமை ஆக்கப்பட்டுள்ளன.

“உள்ளிறைக் குரீஇக் காரணற் சேவல்”

என்ற நற்றிணைப் பாடலும் நெல்லின் அரிசி ஆர்ந்து தன் புறப்பெடையோடு வதியும் குருவியைக் காட்டுகிறது.

” ஆம்பல் பூவின் சம்பல் அன்ன கூம்பிய சிறகர் மனை உரைகுரீஇ ”

என்ற குறுந்தொகைப் பாடலில், ஆம்பல் மலரின் நாம்பல் நிறத்தை ஒத்த குவிந்த சிறகுகளை உடைய வீட்டுக் குருவிகள் முற்றத்தில் உலரும் தானியங்களைத் தின்று, பொது இடத்தின் கண் உள்ள எருவினது நுண்ணிய பொடியைக் குடைந்து விளையாடி, வீட்டில் இறப்பில் தம்முடைய குஞ்சுகளோடு தங்கியிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

“குருவிசேர் வரை போன்ற குஞ்சரம்”என்ற

சீவக சிந்தாமணி யானை மேல் பல அம்புகள் உள்ளதை மலை மேல் குருவிகள் உள்ளதற்கு உவமையாகக் கூறுகிறது.

“குருவி சேர் குன்றம் ஒத்து”என மேருமந்திர புராணமும் இந்தக் குருவி உவமையைக் காட்டுகிறது.

Comment here