மருத்துவம்மாவட்டம்

சிதம்பரத்தில் தொழுநோய் விழிப்புணர்வு பேரணி – மாணவ,மாணவிகள் பங்கேற்ப்பு.

4.5 (90%) 2 votes

 

 

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தொழுநோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்திய தொழுநோய் சேவை அறகட்டளை சார்பில் நடைபெற்ற பேரணியில் தனியார் பள்ளி மாணவர், மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் சிதம்பரம் அரசு மருத்துவமனையிலிருந்து தொடங்கிய பேரணியை முதன்மை மருத்துவர் தமிழரசன் கொடியசைத்து துவக்கிவைத்தார். மாணவர், மாணவிகள்  தொழுநோய் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்றனர். இப்பேரணியில் தொழுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோஷங்களிட்டு பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர் முன்னதாக தொழுநோயால் பாதிக்கப்பட்டோரின் நலனுக்காக சேவையாற்றியவர்களுக்கு நீதிபதி இளவரசன் மற்றும் டீனா மெண்டீஸ் ஆகியோர் விருதுகள் வழங்கினர்.

 

Comment here