ஆன்மிகம்மாவட்டம்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனிதிருமஞ்சன திருவிழா

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனிதிருமஞ்சன திருவிழா

2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான  ஆலயம். சேர, சோழ பாண்டிய, விஜய நகர பேரரசர்கள் திரு[அணிகள் செய்த சிவா ஸ்தலம். மனித உடல மைப்பை கொண்டதாக கருதப்படுவது. சமயக்குரவர்கள் திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர்  ஆகியோரால் பாடல் பெற்ற முதல் திருத்தலம்.பஞ்ச பூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்குவது சிதம்பரம் நடராஜர் கோயில். இந்த கோயிலில்  ஆண்டுதோறும் சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜருக்கு  6  முறை மகா அபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.இந்த அபிஷேகங்களில் இரண்டு தான் முக்கியமானதாகவும் சிறப்பானதகவும் போற்றப்படுகிறது. ஆனி மாதத்தில் நடைபெறும் திருவிழா ஆனிதிருமஞ்சனம், எனவும், மார்கழி மாதத்தில் நடைபெறும் திருவிழா ஆருத்ரா தரிசனம் எனவும் அழைகப்படுகிறது. இரண்டு தரிசன விழாவின் போதும் மூலவர் நடரஜபெருமனேஉற்சவராக புறப்பாடாகி  வீதியுல வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.சிறப்பு வாய்ந்த ஆனித் திருமஞ்சன திருவிழா வருகிற 12 ந் தேதி தொடங்குகிறது. இதனைமுன்னிட்டு வரும் 10  ந் தேதி இரவு விக்னேச்வரபூஜை, அனுக்ஞை, வஸ்து சாந்தி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெறும் மறுநாள் 11ந் தேதி ரக்க்ஷாபந்தனம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றது.12 ந் தேதி காலை பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுகின்றது.காலை 6.30 mani muthal  7.30  மணிக்குள் ஆணி திருமஞ்சன கொடியேற்றம் நடைபெறுகின்றது அதனை தொடர்ந்து காலை மாலை இருவேளையும் பஞ்சமூர்த்தி வீதியுலா நடைபெறுகின்றது.௧௬ இந்தேதி இரவு தெருவடைச்சான் சபரத்தில் பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும், 20 ந்தேதி திருத்தேரோட்டமும் நடைபெறுகிறது. அன்று இரவு ராஜசபை என்கிற ஆயிரம்கல் மண்டபத்தில் சாமிக்கு லட்சார்ச்சனையும்  21 ந் தேதி அதிகாலை மகா அபிஷேகமும், மதியம் 2.00 மணிக்கு மேல் பஞ்சமுர்த்திகல் கோயிலை அடைந்ததும் சிவகமசுன்டரி அம்பாளும் நடராஜபெருமனும் ஆயிரம்கால் மண்டபதில் முன்னும் பின்னும் மூன்றுமுறை வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார் இதுவே ஆணிதிருமஞ்சனம் என்று அழைக்கபடுகிறது. நடராஜபெருமானின் அருள் பெற உள்ளூர் மட்டுமன்றி, வெளிநாடுகளிலி  ருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள்.

 

Comment here