ஆயுர்வேதம்

சித்தரத்தை

சித்தரத்தை எல்லாவகை நிலங்களிலும் வளரக் கூடியது. செம்மண்கலந்த சரளையில் நன்கு வளரும். இது ஒரு செடி வகையைச் சார்ந்த்து. இதன் தாயகம் தெற்கு ஆசியா. பின் மலேயா, லாஸ், தாய்லேண்டு போன்ற நாடுகளுக்குப் பரவிற்று. இது இஞ்சி வகையெச் சேர்ந்தது. அதனால் குறுஞ்செடி. சுமார் 5 அடி உயரம் வளரக் குடியது. இதன் இலைகள் நீண்டு பச்சையாக மஞ்சள் இலைபோன்று இருக்கும். குத்தாக பக்கக்கிளைகள் விட்டு வளரும். இதன் வேர் பாகத்தில் கிழங்குகள் பரவிக்கொண்டே இருக்கும். அதனால் செடி பக்க வாட்டில் வளர்ந்து கொண்டிருக்கும். இதன் வேரில் உண்டாகும் கிழக்கு தான் மருத்துவ குணம் உடையது. இந்தக் கிழங்கு மிகவும் கடினமாக இருக்கும். குருமிளகு வாசனையுடையது. இதன் பழம் சிவப்பாக இருக்கும். பூக்கள் அழகாக இருக்கும். இதன் பக்கக் கிழங்குகள் மூலிம் இன விருத்தி செய்யப்படுகிறது.

சித்தரத்தையின் மருத்துவ குணங்கள் – சித்தரத்தைக்கிழங்கை பச்சையாக எடுத்து சிறு துண்டுகளாக வெட்டி காயவைத்துப் பக்குவப் படுத்தி வைப்பார்கள். இது ஒரு வலி நிவாரணி, சளியைக் குணப்படுத்தும், இருமலைக் குணப்படுத்தும். மூட்டு வாத வீக்கம் குணப்படுத்தும். வயிற்றுப் புண் அலுசரைக் குணப்படுத்தும். தொண்டைப் புண்ணைக் குணப்படுத்தும்.

Comment here