சித்தர்கள் அருளியுள்ள மூச்சுக் கணக்கு! நீளாயுள் பெற்றுய்ய!

Colored outline of a man exhaling warm breath; Shutterstock ID 83887537
Rate this post

 

 

தமிழ் பேசினால் 120 ஆண்டுகள் உயிர் வாழலாம்.
இது எப்படி சாத்தியமாகும் என்பதை காண்போம்.

கல் தோனறி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த முதுமொழி தமிழ்மொழி.

இதோ சித்தர்கள் தந்த தமிழ்மொழியின் சிறப்புகளில் ஒன்றைக் காண்போம்:-

உயிராகி மெய்யாகி ஆயுதமான தமிழ் மொழியில்,

ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு, X ஒரு நாழிகைக்கு 24 நிமிடங்கள்,

நாழிகை ஒன்றுக்கு 360 (15X24) மூச்சு எனச் சித்தர்களால் வகுக்கப்பட்டுள்ளது.

இதை வைத்தே வட்டத்துக்கு 360 பாகைகள் வைக்கப்பட்டது

ஒரு மணி நேரத்துக்கு 900 மூச்சு,ஒரு நாளைக்கு 21,600 மூச்சு வீதம் ஓடுகிறது.

இதற்கும் தமிழுக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கின்றீர்களா? சம்பந்தம் இருக்கிறது.

இந்த 21,600 மூச்சுக்களைக் குறிக்கவே தமிழில் 216 (உயிர்மெய்) சார்பெழுத்துகள் உருவாக்கப்பட்டன.

மூச்சை இப்படி 21,600 வீதம் நாள் ஒன்றுக்கு செலவு செய்தால் ஒரு மனிதன் 120 ஆண்டுகள் வரை உயிருடன் இருக்கலாம்.

மூச்சின் விகிதம் கூடினால் ஆயுள் குறையும்.

மூச்சாற்றலை அதிகம் விரயம் செய்யாமல் பேசும் ஒரே மொழி உலகத்திலேயே தமிழ் மொழி மட்டுமே!

1 நிமிடத்திற்கு 15 மூச்சும்,
1 மணி நேரத்திற்கு 900 மூச்சும்;
1 நாளிற்கு 21,600 மூச்சும் ஓடுகின்றது.

உயிர்மெய்யெழுத்துக்கள் 216 என்பது இந்த 21,600 மூச்சுக்களையே குறிக்கும்.

ஒரு மனிதன் தன் வாழ்நாளில் தினமும் 21,600 மூச்சுக்கு மிகாமல் உபயோகம் செய்தால் அவனுடைய ஆயுள் 120 ஆண்டுகளாகும்.

ஆனால், உட்கார்ந்திருக்கும் போது 12 மூச்சும், நடக்கும் போது 18 மூச்சும், ஒடும்போது 25 மூச்சும், தூங்கும் போது 32 மூச்சும், உடலுறவின் போதும், கோபம் முதலான உணர்ச்சிகளில் சிக்கும் போது 64 மூச்சும் 1 நிமிடத்தில் ஓடுகின்றன.

இந்த மூச்சினுடைய அளவு எவ்வளவு மிகுதியாகிறதோ அதற்கு தகுந்தாற்போல் ஆயுள் குறைகிறது…- இணயப் பகிர்வு!Call

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*