சிந்துவை தக்கவைத்துக் கொண்டது சென்னை!

5 (100%) 2 votes

பிரீமியர் பேட்மிண்டன் லீக் போட்டிக்கான ஏலத்தில் சிந்துவை சென்னை ஸ்மாஷர்ஸ், சாய்னா நேவால், ஸ்ரீகாந்த் ஆகியோரை அவதே வாரியர்ஸ் அணிகள் தக்க வைத்து கொண்டன.

மொத்தம் ரூ.6 கோடி பரிசுத்தொகைக்கான 3வது பிரிமீயர் பேட்மிண்டன் லீக் போட்டி டிசம்பர் 22-ந்தேதி முதல் ஜனவரி 14-ந் தேதி வரை நடைபெறுகிறது. சென்னை ஸ்மாஷர்ஸ், மும்பை ராக்கெட்ஸ், அவதே வாரியர்ஸ் (லக்னோ), பெங்களூரு பிளாஸ்டர்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.

இந்த போட்டிக்கான வீரர், வீராங்கனைகளின் ஏலம் ஐதராபாத்தில் நேற்று நடந்தது. 82 இந்தியர்கள் உள்பட மொத்தம் 11 நாடுகளைச் சேர்ந்த 120 பேர் ஏலப்பட்டியலில் இடம் பெற்று இருந்தனர்.
சமீபத்தில் நடந்த உலக போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்துவை நடப்பு சாம்பியன் சென்னை ஸ்மாஷர்ஸ் அணி தக்க வைத்து கொண்டது.

உலக போட்டி மற்றும் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவரான இந்திய வீராங்கனை சாய்னா நேவாலை அவதே வாரியர்ஸ் அணியும் இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா ஓபன் பட்டத்தை வென்ற இந்திய வீரர் ஸ்ரீகாந்தை அவதே வாரியர்ஸ் அணியும் தக்க வைத்து இருக்கிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*