சினிமா டிக்கெட் கட்டணம் எகிறியது!

5 (100%) 1 vote

கேளிக்கை வரிவிதிப்புக்கு எதிராக திரைத்துறை சார்பில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள தமிழக அரசு அனுமதி அனுமதி அளித்துள்ளது.

கட்டணத்தை 25% வரை உயர்த்திக் கொள்ளலாம் என்று தமிழக தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் அதிகபட்சம் ரூ.160 ரூபாயும், குறைந்தபட்சம் ரூ.15ம் டிக்கெட் கட்டணமாக நிர்ணயிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தற்போது ரூ. 120-ஆக உள்ள டிக்கெட் விலை ரூ. 150-ஆகவும்,

ரூ. 95-ஆக உள்ள டிக்கெட் விலை ரூ. 118.80-ஆகவும்,

ரூ. 85ஆக உள்ள டிக்கெட் விலை ரூ. 106.30-ஆகவும்,

ரூ.10-ஆக உள்ள டிக்கெட் விலை ரூ.15-ஆகவும் நிர்ணயம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கட்டண உயர்வு திங்கட்கிழமையில் இருந்து அமலாகும் என்று தெரிகிறது.

சினிமா தியேட்டர்களுக்கு கடந்த 27ம்தேதி முதல் தமிழக அரசு உள்ளாட்சி வரி (கேளிக்கை வரி) விதித்துள்ளது.

ஏற்கனவே ஜி.எஸ்.டி. வரி 18% அல்லது 28% அளவில் வசூலிக்கப்படுகிறது. அதோடு உள்ளாட்சி வரியும் விதிக்கப்பட்டதால் இரட்டை வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கேளிக்கை வரியை முழுவதுமாக ரத்து செய்ய வலுயுறுத்தியும் புதிய படங்களை திரையிடுவது இல்லை என்று தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்தது.

இந்நிலையில் வரும் 9ந்தேதி முதல் புதிய கட்டண உயர்வு அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தியேட்டர் உரிமையாளர்களுடன் அரசு பேசி கட்டண உயர்வை தானே அறிவிக்காமல் தியேட்டர் உரிமையாளர்களுக்கு முழு அதிகாரத்தை வழங்கி இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இது பெரும் அதிருப்திக்கு இடமளித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*