அரசியல்

சிவபெருமான் என்னை அழைத்தார் : கெஜ்ரிவால்

2017ம் ஆண்டு குஜராத்தில் நடக்க உள்ள சட்டசபை தேர்தல் பிரச்சார பணிகளை ஆம்ஆத்மி கட்சி துவக்கி உள்ளது. இதன் ஒரு பகுதியாக சூரத் பகுதியில் உள்ள வர்த்தக அமைப்பினரை சந்திக்க டில்லி முதல்வரும், ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்திருந்தார்.

ஆனால் இந்த கூட்டத்திற்கு குஜராத் அரசு அனுமதி மறுத்ததை அடுத்து கெஜ்ரிவாலின் சூரத் பயணம் ரத்து செய்யப்பட்டது. தனது பயணத்தை ஜூலை 9ம் தேதிக்கு மாற்றி வைத்திருப்பதாகவும் கெஜ்ரிவால் அறிவித்திருந்தார். இந்நிலையில் தனது சூரத் பயண ரத்து குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள கெஜ்ரிவால், ஆனந்திபென் பட்டேல் எனது சூரத் பயணத்தை ரத்து செய்தார். ஆனால் சிவபெருமான் என்னை அழைத்தார்.

அதனாலேயே சோம்நாத் கோயிலுக்கு சென்று வழிபட உள்ளேன். இந்த நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடக்கும் என குறிப்பிட்டுள்ளார். ஜூலை 9ம் தேதி சூரத் வரும் கெஜ்ரிவால் அங்கு விவசாயிகளையும், கிராமத்தினரையும் சந்திக்க உள்ளதாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ஹர்சில் நாயக் தெரிவித்துள்ளார்.

Comment here