சிவ பக்தன் என்றால் யார்? சிவனடியார் என்றால் யார்?

Rate this post

இவ்விரண்டுமே ஒன்றுபோல தான் தெரியும்.
ஆனால் சிவபக்தனுக்கும் சிவனடியாருக்கும்
சில வேறுபாடுகள் உள்ளன.
என்பதை உணர்ந்ததுண்டா?

1)சிவனை கண்டதும் பனிபவன் பக்தன். சிவனுக்காக
எதையும் செய்ய துனிந்தவன் அடியார்.

2)சிவனை வணங்குபவர் பக்தன்.
சிவனை மட்டும் வணங்குபவர் அடியார்.

3)உடல் தூய்மையாக இருந்தால்
மட்டுமே கோயிலுக்கு செல்பவர் பக்தன்.
உடலை ஒரு பொருட்டாக கருதாமல்,
மனத்தூய்மை வேண்டி கோயிலுக்கு செல்பவர் அடியார்.

4)அர்சனை செய்வதற்காக கோயில் செல்பவர் பக்தன்.
ஈசனை போற்றி பாடி ஆனந்தமடைய கோயில்
செல்பவர் அடியார்.

5)அறமல்ல சிவம் என்று உணராதவர் பக்தன்.
அன்பே சிவமென உணர்ந்தவர் அடியார்.

6)மறைக்குள்ளும் முறைக்குள்ளும் இருப்பவர்
ஈசன் என்று நினைப்பவர் பக்தன். ஈசனை அடைய
மனமும் மொழியும் தடையில்லை, ஆக
மறையும் முறையும்
எமக்கில்லை என்று நினைப்பவர் அடியார்.

7)கூட்டத்தோடு கூட்டமாக
இறைவனை காண்பவர் பக்தன். .
கூட்டம் போனபின்
ஈசன் அழகை தனித்து நின்று ரசிப்பவர் அடியார்.

8)ஈசனை அடைய சுத்தமாக இருக்கவேண்டும்
என நினைப்பவர் பக்தன். சுத்தத்தை பெரிதாக எண்ணாமல் சித்தத்தை
சிவன்பால் வைப்பவர் அடியார்.

9)வாழ்வில்
ஒரு பகுதியை வழிபாடுக்கு செலவு செய்பவர்பக்தன்.. வாழ்வையே வழிபாடாக கொண்டவர் அடியார்.

சிவபக்தனாக இருப்பதைவிட சிவனடியாராக இருப்பதுதான் மிக மிக சுலபம்.

சிவபக்தனுக்கு மறுபிறவி நிச்சயம்.
சிவனடியார்க்கு முக்தி நிச்சயம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*