உலகம்

சீனாவில் குளோனிங் மூலம் 5 குரங்குகள் உருவாக்கம்

Rate this post
பீஜிங் : ‘அல்சீமர்’ எனப்படும் தூக்கமின்மை, மன அழுத்தம், ஞாபக மறதி, சிந்தனை இழத்தல் போன்ற நோய்களுக்கு தீர்வு காணும் ஆராய்ச்சியை சீனாவின் அறிவியல் ஆய்வு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்த ஆராய்ச்சிக்காக அல்சீமர் நோய் உடைய மரபணு மாற்றம் செய்யப்பட்ட குரங்கில் இருந்து, குளோனிங் முறையில் 5 குரங்குகளை சீன விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.
ஷாங்காய் நகரில் உள்ள நரம்பியல் அறிவியல் மையத்தில் இந்த குளோனிங் குரங்குகள் உருவாக்கப்பட்டதாகவும், தற்போது அந்த குரங்கு குட்டிகள் இன்குபேட்டரில் வைக்கப்பட்டிருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comment here