சினிமா

சீனாவில் வெளியாகும் ரஜினியின் ‘2.0’

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 2.0. இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் தயாரானது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2.0 திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. ரூ.600 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு ரூ.800 கோடி வரை வசூலித்ததாக கூறப்பட்டது.

இந்த படத்தை சீனாவை தவிர்த்து உலகம் முழுவதும் திரையிட்டனர். அடுத்து சீனாவில் வெளியிடுவதற்கான பணிகளையும் தொடங்கினார்கள். தற்போது அடுத்த மாதம் (ஜூலை) 12-ந் தேதி சீனாவில் 2.0 வெளியாகும் என்று படக்குழு அறிவித்து உள்ளது. அங்கு 10 ஆயிரம் தியேட்டர்களில் திரையிடுகின்றனர். சீன மொழியில் டப்பிங் செய்து ஆங்கில மொழி சப் டைட்டிலுடன் வெளியிடுகின்றனர். ஏற்கனவே விஜய் நடித்த மெர்சல் படமும் சீனாவில் வெளியாகி வரவேற்பை பெற்றது. அமீர்கான் நடித்த 3 இடியட்ஸ், தங்கல், பிகே இந்தி படங்களும் சீனாவில் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தி உள்ளன.

தங்கல் படம் ரூ.1,229 கோடி வரை வசூல் ஈட்டியது. சீனாவில் இதுவரை அதிக வசூல் குவித்த படங்கள் பட்டியலில் 24-வது இடத்தை தங்கல் பிடித்தது. சீனாவில் சினிமா வர்த்தகம் லாபமான தொழிலாக பார்க்கப்படுகிறது. அங்கு தியேட்டர்கள் எண்ணிக்கையும் அதிகம் எனவேதான் சீனாவில் இந்திய படங்களை வெளியிட ஆர்வம் காட்டுகின்றனர்.

Comment here