பொது

சீரடியில் ஓடுபாதையை கடந்து சென்ற விமானத்தால் பரபரப்பு

டெல்லியில் இருந்து மராட்டிய மாநிலம் சீரடிக்கு சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம், விமான நிலையத்தில் ஓடுபாதையை கடந்து சென்றது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக விமான நிலையத்தின் ஓடுபாதை மூடப்பட்டு, மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. விமானத்திலிருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Comment here