ஆன்மிகம்உலகம்வரலாறு

சீரடி சாயி பாபா

 

சீரடி சாயி பாபா, 20 ஆம்  நுற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த ஓர் இந்திய குரு ஆவார். இதுவரை இந்தியாவில் பிறந்த மிகச்சிறந்த துறவிகளில் இவரும் ஒருவர்.   இவரை இந்துக்களும், இஸ்லாமியர்களும் புனித துறவியாகவும் போற்றுகின்றனர். தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு பல அற்புதங்களை நிகழ்திக்காட்டினார். நோயுள்ளவர்களை குணப்படுத்தினார். இதனால், இந்துக்கள் இவரை ‘கடவுளின் அவதாரம்’ என்று கருதி, தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இஸ்லாமியர்கள் இவரை, ‘பிர் அல்லது குதுப்’ ஆக நம்புகின்றனர். உலகமெங்கும் இருந்து பக்தர்கள் அவர் வாழ்ந்து மறைந்த ஸ்தலத்தை வணங்கி தரிசிக்க, அவர் பிறந்த இடமான சீரிடிக்கு வருகைப் புரிந்த வண்ணம் உள்ளனர். தன்னுடைய வாழ்நாள் முழுவதும் துறவியாகவே வாழ்ந்து மறைந்த புனித சீரடி சாய் பாபா அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சிறப்புகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: செப்டம்பர் 28, 1838

இடம்: சீரடி, அகமது நகர் மாவட்டம், மகாராஸ்டிரா மாநிலம், இந்தியா

பணி: இந்திய குரு

இறப்பு: செப்டம்பர் 20, 1928

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு பற்றிய தகவல்

சீரடி சாய் பாபா என்றழைக்கப்படும் “சாய் பாபா” அவர்கள் இந்தியாவின் மகாராஸ்டிரா மாநிலம் அகமது நகர் மாவட்டதிலுள்ள “சீரடி” என்ற இடத்தில் பிறந்தார். இவருடைய பிறப்பு மற்றும் ஆரம்ப வாழ்க்கை பற்றிய உண்மையான தகவல்கள் ஏதும் கிடைக்காததால், இன்றுவரையும் அவருடைய பிறப்பு பற்றிய விவரங்கள் மர்மமாகவே உள்ளது. ஆனால், அவர் இந்து மதம் சார்ந்த பெற்றோருக்கு பிறந்ததாகவும், பிறகு ஒரு முஸ்லிம் குடும்பத்தில் வளர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

ஒரு மகானாக சீரடி சாயி பாபா

அவருக்குப் பதினாறு வயது இருக்கும் பொழுது, ஒரு வேப்பமரத்தடியில் முதல் முதலாக தியானத்தில் ஈடுபட்டிருந்தபொழுது, ஒரு மகானாக காட்சியளித்ததாக கூறப்படுகிறது. பின்னர், அவரை நாடிவந்த மக்களுக்கு சிறந்த ஆன்மீகத் தத்துவங்களை எடுத்துக்கூற தொடங்கினார். அவரை தரிசிக்க அதிகளவில் மக்கள் வர ஆரம்பித்தனர். மேலும், தன்னிடம் ‘உடல் நிலை சரியில்லை’ என்று வருபவர்களுக்கு ஆசி வழங்கி அவர்களுடைய நோயைக் குணப்படுத்தினார். அவருடைய ஆன்மீக போதனைகள், இந்து மற்றும் இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல், அனைத்துத்தரப்பு மக்களையும் கவர்ந்தது. அதுமட்டுமல்லாமல், அவருடைய போதனைகளும், தத்துவங்களும், கூற்றுகளும் பொதுமக்கள் எளிதில் புரிந்துக்கொள்ளும் அளவிற்கு மிக எளிமையான மொழியில் இருந்தது. அவருடைய புகழ், இந்தியா முழுவதும் பரவத் துவங்கியது.

இறப்பு

இருபதாம் நூற்றாண்டில் இந்தியா முழுவதும் பரவலாக அறியப்பட்ட ‘முதல் அவதாரப் புருஷர்’ எனப் போற்றப்பட்ட சீரடி சாய் பாபா அவர்கள், 1918 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் இந்த உலக வாழ்க்கையை விட்டு நீங்கினார். இன்று அவர் இல்லாவிட்டாலும், சீரடியில் அவர் சமாதியான இடம் தற்பொழுது பல்லாயிரக்கணக்கானவர் புனிதமாக வணங்கும் புண்ணியத் தலமாக விளங்குகிறது.

நான் தான் செய்கிறேன்

எல்லாச் செயல்புரியும் சக்திகளையும் சாயி பாதங்களில் சமர்ப்பித்துவிடுங்கள். பிறகு அவர் ஆணையிட்ட ரீதியிலேயே செயல்படுங்கள். சாயி சர்வசக்தியும் நிறைந்தவரென்பதை அறிந்துகொள்ளுங்கள். பாரத்தை அவர்மீது போட்டுவிட்டு அபிமானம் கொள்ளாது செயல் புரியுங்கள்; எல்லா சித்திகளையும் பெறுவீர்கள்.
மாறாக, மிகச் சிறிய அளவில் அபிமானம் ஒட்டிகொண்டிருந்து, ‘நான்தான் செய்கிறேன்’ என்று நினைத்தால் ஒரு கணமும் தாமதமில்லாது உடனே அதனுடைய விளைவு தெரியும்.

புறச்சம்பிரதாயங்களை லட்சியம் செய்வதில்லை.

அன்புடனும் பக்தியுடனும் அளிக்கப்படும் எத்தகைய சிறிய பொருளையும், பாராட்டுதல்களுடன் பாபா ஏற்றுக்கொள்வார். ஆனால் அதுவே பெருமையுடனும்,இறுமாப்புடனும் அளிக்கப்பட்டால், ஏற்றுக் கொள்ள மறுத்து விடுவார். வெறும் புறச் சம்பிரதாயங்களை, அவர் பெருமளவு லட்சியம் செய்வதில்லை. அடக்கவொடுக்கத்துடனும், பணிவான உணர்வுடனும், ஒன்று சமர்பிக்கப்படுமானால் அதை அவர் வரவேற்று, பேரார்வத்துடனும், மகிழ்ச்சியுடனும் ஏற்றுக் கொண்டார்.- ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.

இதயப்பூர்வமான சரணாகதி

பாபாவிடம் இதயப்பூர்வமான சரணாகதி அடைதலே துயரங்களின் பிடிகளிலிருந்து விடுபடுவதற்கு மிகச்சிறந்த வழியாகும். வெறும் உடலை மட்டும் பாபாவிடம் இருத்துவதால் லாபம் என்னவாக இருக்க முடியும்? சிந்தனையும் பாபாவை பற்றியதாக இருக்க வேண்டும். அப்போது சுகம் உண்டாகும்.

நீ எங்கிருந்தாலும் உன்னுடனேயே நான் இருக்கிறேன்

ஒரு குரு பெளர்ணமி தினம். என் குருவான உபாசினி மகராஜ் ஷிர்டியை விட்டு கரக்பூருக்கு போவதற்கு முன் அது. சாயி பாபா என்னிடம் பூஜை சாமான்களையும், நைவேத்தியத்தையும் எடுத்துச் சென்று மகராஜுக்கு பூஜை செய்யும் படி பணித்தார். பாபாவின் ஆணை எனக் கூறி மகராஜை நான் பூஜை செய்யத் தொடங்கினேன். மகராஜ் என்னைத் தடுக்கவில்லை. ஆனால் அந்த தினத்திற்கு பிறகு நான் மகராஜை ஒரு போதும் பூஜை செய்யவில்லை. அவரிடம் என்னகுள்ளது ஒரு குருபந்துவினிடம் இருக்க வேண்டிய எண்ணமே. ஷிர்டி மக்கள் பலரைப் போல் நான் அவரிடம் வெறுப்பு காட்டவில்லை. சாயிபாபா அடிக்கடி சொல்வார்; “நாம் யாரிடமும் வெறுப்பு கொள்ளக்கூடாது; பொறாமை, விரோதம், எதிர்ப்பு, சண்டைபோடும் மனோபாவம் ஆகியவை தவிர்க்கப்படவேண்டும்.”  ஆனால் உபாசினி மகராஜிடம் என் மனோபாவத்தை அவரும் மற்றவர்களும் தவறாகப் புரிந்து கொண்டு விட்டனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய பஞ்சகன்யா நிறுவனத்தில் கொண்டு வரப்பட்ட சில மாற்றங்களில் உதவும் நோக்கத்துடன் நான் சகோரிக்குச் சென்றேன். ஆனால், என் எண்ணம் அவருக்கு எதிராக இருக்குமெனக் கருதி, மனம் விட்டு தனியாக அவரிடம் பேசக்கூட அவர் அனுமதிக்கவில்லை. நான் திருபினேன்.

என்னிடமும் என் குடும்பத்திடமும் சாயிபாபா காட்டிய பிரிவு 1918-ல்  அவர் இறப்பதற்கு முன் மட்டுமின்றி பின்னரும் வெளியாயிற்று.

1918-ம் ஆண்டு தசராவுக்கு முன்று மாதங்களுக்கு முன்பு தாம் உடலை விட்டபிறகும் என் நல்வாழ்வைப் பற்றி எண்ணியிருந்தார். “பாய்!(அவர் என்னை அப்படித்தான் அழைப்பார்) நீ என்னைக் காண இனி இங்கே வந்து சிரமப் பட வேண்டாம். நீ எங்கிருந்தாலும், உன்னுடனேயே நான் இருக்கிறேன்” என அவர் என்னிடம் உறுதி அளித்தார். (இதைச் சொல்லும்போது அந்த அம்மையாரின் கண்களில் நீர் பெருகியது) – சந்திர பாய். ஷிர்டி சாய்பாபாவின் பக்தர் அனுபவங்கள்.

அமைதியாக அமர்ந்திரு

 அமைதியாக அமர்ந்திரு. நான் உனக்கு தேவையானதை செய்வேன். நான் உன்னைக் குறிக்கோளை அடையச் செய்வேன். – ஷீரடி சாய்பாபா

நானேதான் என்னிடம் வரவழைக்கிறேன்

ஒருமுறை பக்தர் ஒருவர், உலக ஆதாய நன்மையை நாடி பாபாவிடம் மக்கள் போவதை ஆட்சேபித்தபோது, பாபா “ஒருபோதும் அப்படி சொல்லாதே. எனது மக்கள் முதலில் அதற்காகத்தான் என்னை நாடி வருகிறார்கள். தமது ஆசைகள் நிறைவேறி, வாழ்க்கையில் சவுகரியத்தை அடைந்த பிறகு, அவர்கள் என்னை பின்பற்றி ஆத்மீகத் துறையிலும் முன்னேறுகிறார்கள். என்னைச் சேர்ந்தவர்களை தொலை தூரத்தில் இருந்தெல்லாம் பல்வேறுவித முகாந்திரமாக இங்கே வரவழைக்கிறேன். நானேதான் அவர்களை என்னிடம் வரவழைக்கிறேன். அவர்கள் தம் இச்சைப்படி தாமே வருவதில்லை. நான் அவர்களை என்னிடம் இழுத்துக்கொள்கிறேன்” என்றார். இச்சொற்கள் இன்றும் பலித்து வருகின்றன.

அனைத்து வியாதிகளும் குணப்படுத்தப்படும்

என்னுடைய கதைகள், உபதேசங்கள் இவைகளைக் கேட்போருக்கு நான் பணிவிடை செய்வேன். செய்வது மட்டுமல்ல, அவர்கள் ஆசைகளையும் பூர்த்தி செய்வேன். என்னுடைய கதைகள் வெறுமனே கேட்கப்பட்டால் கூட அவர்களது அனைத்து வியாதிகளும் குணப்படுத்தப்படும். என்னுடைய பக்தர்களை எக்கணமும் அச்சுறுத்துகின்ற ஆபத்துக்களின் கோரப்பற்களிலிருந்து நான் வெளியே இழுத்துவிடுவேன். – ஸ்ரீ ஷீரடி சாயிபாபா

சிறிதளவும் அஞ்சாதீர்

நீர் உமது கடமையைச் செய்யும். சிறிதளவும் அஞ்சாதீர். என் மொழிகளில் நம்பிக்கை வையும். என்னுடைய லீலைகளை நினைவில் கொள். நான் உன்னுடைய ஆசைகளைப் பூர்த்தி செய்து உன்னுடைய பக்தியை அதிகப்படுத்துவேன். – ஸ்ரீ ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாய்  சத்சரித்திரம்]

ஆராய்ச்சிக்கு அப்பாற்ப்பட்டவை

“இந்த ஜகத்தில் நான் ஒருவனே இருக்கின்றேன்; என்னைத் 
 தவிர  வேறெதுவும் இல்லை. இப்பூவுலகம் மாத்திரமல்லாது
 மூன்று உலகங்களிலும் நான், நான் மாத்திரமே இருக்கின்றேன்.”
                                                                                         -ஷிர்டி சாய்பாபா.

பாபாவின் லீலைகள் சூக்குமமானவை; ஆராய்ச்சிக்கு அப்பாற்ப்பட்டவை. யாரால் அவற்றைக் கற்பனை செய்ய முடியும்? எல்லாரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திவிடுகின்றன! வேறெதையும் நாடாமல் சாயியின் பாதங்களில் எவர் சிரம் தாழ்த்துகிறாரோ அவர், தம்மைக் காக்கும் தெய்வமும் அபயமளிப்பவரும் நன்மையைச் செய்பவரும் தீமையை அழிப்பவரும் ஒரே அடைக்கலமும் சாயியே என்று உணர்ந்துகொள்வார்.

என்னையே தியானி

மன சாந்தி இல்லாத என்ற ஒரு அங்குல இடம் கூட இவ்வுலகில் எங்கும் கிடையாது. உன் பாரத்தை என் மேல் வை. என் மீது உன் பார்வையை திருப்பு. என்னையே தியானி, நிச்சயமாய் நான் உனக்கு சாந்தியை அளிப்பேன்.- ஷிர்டி ஸ்ரீ  சாய்பாபா

துவாரகாமாயி

ஸ்ரீ சாய்பாபா ஷீரடிக்கு வந்த ஆரம்ப காலத்தில், அவருக்குப் பின்புறம் நீண்டு தொங்கும் முடி இருந்தது. பச்சை நிறத்தில் நீண்ட அங்கியும், தலையில் முதலில் ஒரு குல்லாயும், அதன்மேல் காவி நிறத்தில் தொப்பியும் அணிந்திருந்தார்.  அவர்தம் கையில் ஒரு தண்டத்தையும் புகைக்குழாய், தீப்பெட்டி ஆகியவற்றையும் வைத்திருப்பார். அவர் பிச்சையெடுத்து உண்டு வந்தார்.
ஷீரடிக்கு வந்த நாலைந்து மாதங்களுக்குப்பின், பாபா வெள்ளை அங்கியும், வெண்மையான தலை உடைகளையும் அணியத்தொடங்கினார். இரண்டாவதுமுறை ஷீரடிக்கு வந்த பிறகும் கூட, பாபா சிறிதுகாலம் வேப்பமரத்தடியிலேயே வாழ்ந்ததாகத் தோன்றுகிறது. ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியின் காரணமாகத்தான், அவர் தமது வாசத்தைக் கிராமத்திலுள்ள ஒரு பழைய பாழடைந்த மசூதிக்கு மாற்றிக் கொண்டார்.

மசூதிக்கு ( துவாரகாமாயி ) மாறியது.

ஒருமுறை ஷீரடியிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் அடைமழை பெய்தது. அதன் பெரும்பகுதி வெள்ளக் காடாகிவிட்டது. நீண்ட நேரத்துக்குப்பின் பாபாவின் ஆரம்பகால பக்தர்கள் சிலர், வீடற்ற பக்கீரின் ஞாபகம் வந்தவர்களாய், அவர் இந்த மலையிலிருந்து எங்கு ஒதிங்கியுள்ளார் என்று காண விரும்பினார்கள். மஹல்சபதியும் மற்றும் சிலரும் வேப்ப மரத்துக்கு விரைந்தனர். அங்கே சாயிபாபா அதே மரத்தடியில் பாதி சாய்ந்தவராகக் சமாதி நிலையில் இருப்பதைக் கண்டு செயலற்றுப் போயினர். அவர் மேல் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. எல்லாவிதமான குப்பைகூளங்களும் அவர் உடல்மேல் சேர்ந்திருந்தன. அவரை அந்த நிலையிலிருந்து எழுப்ப அவர்களுக்குத் துணிவிருக்கவில்லை. அவர்கள் காத்துக் காத்துப் பார்த்துப் பின் சற்று நேரத்துக்குப்பின் வரலாமென்றெண்ணித் திரும்பச் சென்றனர். சில மணி நேரத்துக்குப் பின், தண்ணீர் முழுதும் வடிந்தபின் அவர்கள் வந்து பார்த்தபோது, அவர் இன்னும் ஈரத் தரையிலேயே கிடப்பதைக் கண்டனர். அவரது உடலும் முகமும் முற்றிலும் மண்ணால் மூடப்பட்டிருந்தன. தமக்குத் துன்பங்கள் வந்துற்றபோது தமது ஒரே பாதுகாப்பாளராகவும், வழிகாட்டியாகவும் இருந்த அவரை ஒரேயடியாகக் கவனிக்காமல் இருந்துவிட்டதைக் குறித்து, அவர்கள் குற்ற உணர்வு அடைந்தனர். பின்னர் அவர் சாதாரண உணர்வு நிலைக்குத் திரும்பியவுடன் அந்த பக்தர்கள், அவரைக் கிராமத்திலுள்ள ஒரு சிறிய பழுதடைந்த மன்கட்டிடமான மசூதியில் தங்குமாறு செய்தனர். சாயிபாபா ஒரு முஸ்லீம் ஆகையால், அவர் ஜானகிதாஸ், தேவிதாஸ் போன்ற மற்ற மகான்களைப் போல் இந்துக்களின் கோவில்களில் தங்குவது சரியல்ல என்று கிராமத்தின் இந்துக்கள் கருதியே இவ்வாறு செய்திருப்பார் போலும். அப்போதிலிருந்து அவர் மசூதியில் சிறிது நேரமும், வெப்ப மரத்தடியில் சிறிது நேரமும் இருப்பார். பின் சிறிது காலத்தில் அவர் மசூதியையே தமது முக்கிய, முழுநேர இருப்பிடமாக்கிக் கொண்டார்.

Comments (2)

  1. Very useful and important message thanks

Comment here