சீராய்வு மனு ஐயப்பா சேவா சமாஜம்

Rate this post

சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதாக சபரிமலை ஐயப்பா சேவா சமாஜம் தேசிய இனை பொதுச் செயலாளர் துரைசங்கர் தெரிவித்துள்ளார்…

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்

கேரளாவில் உள்ள ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதிக்க எந்த தடையும் இல்லை அவர்களை அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குடியரசு தலைவர் பிரதமரிடம் மனு அளிக்க இருப்பதாகவும், உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது என்று கூறினார். மேலும்,
வரும் 12 ந்தேதி வள்ளுவர் கோட்டத்தில் சத்திய பிராமணம் எடுக்கும் போராட்டம் நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்தார்…

காலம் காலமாக இருக்கும் பாரம்பரியமான நடை முறையை அதை
நாங்கள் மாற்றிக்கொள்ள முடியாது பெண்கள் சபரிமலை கோவிலுக்கு செல்வதை நாங்கள் எதிர்க்கிறோம்.. என அவர் கூறினார்.

(பைட்) துரைசங்கர்.
சபரிமலை ஐயப்பா சேவா சமாஜம்
தேசிய இனை பொதுச் செயலாளர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*