வரலாறு

சீர்காழி மூவர்

திருவையாற்றில் பாடல்கள்
எழுதிய தியாகராஜனுக்கு இன்று (23- 1 -2019) மூன்றாவது நாளாக விழா நடைபெறுகிறது.

அதே தஞ்சைத் தரணியில
வாழ்ந்தவர்உண்மையான
தமிழிசைக் காவலர்
தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்.

உலகின் முதலிசை தமிழிசையே என்று
உலகுக்கு உணர்த்திய இசைத் தமிழர்.

கருணாமிர்த சாகரம் என்ற நூலின் மூலம் தக்க சான்றுகளுடன் இக் கூற்றை
ஐயந்திரிபற நிறுவியவர்.

சிலப்பதிகாரம் தொடங்கி அருட்பிரகாச
வள்ளலார் வரை தமிழிசை எவ்வாறெல்லாம்
பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதை
எடுத்துக் காட்டியவர்.

மேலும்

அதே தஞ்சைத் தரணியில் சீர்காழியில்
வாழ்ந்தவர்கள், சீர்காழி மூவர் என்ற
சிறப்புப் பெற்றவர்கள் இவர்கள்.

  1. முத்துத்தாண்டவர் (கி.பி.1560 – 1640)

  2. அருணாசலக் கவி (கி.பி.1711-1776)

  3. மாரிமுத்தாப் பிள்ளை (1712 – 1787 )

இவர்களே இப்போது கருநாடக
இசை என்று குறிக்கப்பெறும்
இராகங்களை வகுத்தவர்கள்.

இந்த உண்மை ஆபிரகாம் பண்டிதரால்
தான் வெளிக்கொண்டுவரப் பெற்றது.

ஆனால் இவர்களுக்குக் காலத்தால்
பிந்தியவர்களும் தெலுங்கிலும், வட
மொழியிலும் எழுதியவர்களுமான,

தியாகராஜன்.முத்துசாமி தீட்சிதன்,
சியாமா சாஸ்திரி ஆகியவர்களின்,
எந்த இலக்கண வரம்பிற்கும்
உட்படாத தெலுங்கு வடமொழிப்
படைப்புகளைப் புனிதமானவை
என்றும் இவர்களே கருநாடக
இசையின் பிதாமகர்கள் என்றும்
பார்ப்பனக் கூட்டம் தூக்கித்
தலையில் வைத்துக்
கொண்டாடி விழா நடத்திக்
கொண்டிருக்கிறது.

இவர்களுக்கு ஆண்டுதோறும் விழா எடுக்க .மைய அரசும், மாநில அரசுகளும் மாநியமாக இதுவரை எராளமான உதவி மற்றும் ரூபாய்களை , மக்களின் வரிப் பணத்திலிருந்து வாரி வழங்கிக்கொண்டுள்ளன. ஆனால் அங்கு தமிழிசைக்குத் தடை விதித்துள்னர்.

இந்த அக்கிரமங்களுக்கு ஒரு முடிவு
கட்ட வேண்டும். இத்தகைய அயல்மொழி
இசைவிழாக்களைத் தடை செய்ய வேண்டும்.

நம் தொன்மையான தமிழிசை விழாக்கள் பல்கிப் பெருக வேண்டும்.

இதுவே நாம் தஞ்சை ஆபிரகாம் பண்டிதருக்கும் தமிழிசை மூவருக்கும் செலுத்தும் உண்மையான நன்றிக்கடன் ஆகும்

வாழ்க, வளர்க , தமிழிசை மூவர்,
தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் ஆகியோர் புகழ்
ஆக்கம் Thulakol soma Natarajan

Comment here