சமையல்

சுக்கு காபி

  • சுக்கு  – 5 கிராம்
  • மிளகு – 7 கிராம்
  • சீரகம் – அரை ஸ்பூன்
  • கொத்துமல்லி விதை – 1 ஸ்பூன்
  • கிராம்பு – 1
  • ஏலக்காய் – 2
  • பனைவெல்லம் (கருப்பட்டி) – தேவைக்கேற்ப
செய்முறை
கருப்பட்டி தவிர மேலே சொன்ன அனைத்தையும் குழிக்கல்லில் போட்டு நன்றாக தட்டவும்.
பிறகு அதை 150 மி.லி தண்ணீரில் போட்டு அதோடு கருப்பட்டியும் தனியாவும் நுணுக்கிப்போட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
அது 100 மி.லி. யாக வற்றிய பிறகு இறக்கி விடவும். அவ்வளவுதான்…ருசியான ஒரிஜினல் சுக்கு காபி ரெடி.

Comment here