சுடுகாடு சுடுகாடு எது சுடுகாடு

Rate this post

   சுடு காட்டினில் ஆடுபவர் சிவன் என பலரும் சிவத்தை வணங்க மறுக்கின்றனர்.

அல்லது பயப் படுகிறார்கள்.

      ஏன் எதற்கு இந்த பயம்.

சிவன் என்ற பெயரில் உள்ள மிகப் பெரும் சக்தியே அனைத்தையும் இயக்கும் கடவுள்.

  ஏகன் அனேகன். ஒரு சக்தியே பல கோணங்களில் பல பெயரில்.

அந்த மிகப் பெரும் சக்தியே வெவ்வேறு தன்மையில் வெவ்வேறு பெயரில் அனைவராலும் வணங்கப்படுகிறது. யாரை வணங்கினாலும் அது இறைவனையே சென்றடைகிறது.

   பிறவா நிலையான சனாதனம்

வேண்டுவோர் நேரடியாக சிவத்தை வணங்குவது முறையாகும்.

     சுடுகாட்டினில் ஏன் இறைவன் ஆடுகிறார். ?

   சிவத்தை முழுமையாக சரணாகதி அடைந்து அனைத்தும் சிவமே என்பதை உணர்வோருக்கு சிவயோகம் (சிவா :வாசி) இறைவனாராலே தரப்படும்.
       அதை முறையாக செயல்படுத்தி அன்புமயமாய் சிவத்தோடு உருகும் போது        

    ஒன்பது வாசலும் அடைக்கப் பட்டு நாம் முன் எடுத்த பல பிறவி ஜென்மாவில் மற்றும் இப்பிறவி என அனைத்துப் பிறவியிலும் நாம் செய்த பாவ, புண்ணிய கர்ம வினையானது அனைத்தும் அடைபட்டு கிடக்கும் அப்போது பத்தாம் வாசல் திறந்து
            சிவ பெருமான் கருணையோடு  ஏழு வண்ணத்தில் ஒளிப் பிழம்பாக. பஞ்ச தாண்டவம் ஆடி அந்த ஒளிப் பிழம்பினிலே மேலே சொன்ன பாவ புண்ணிய கர்ம விதிப் பலனை அனைத்தையும் எரித்து பஸ்பமாக்கி நமது ஆன்மாவை புனிதமாக்குகிறார். 

     இதுவே சிவனாடும் சுடுகாடு தவிர பிணம் எரிக்கும் காடு அல்ல என்பதைப் புரிந்து

       பாவ புண்ணிய கர்ம வினைகள் அனைத்தும் எறிக்கும் சுடுகாட்டினிலே ஆடி நம்மை ஆட்டுவிக்கும் இறைவனாம் சிவத்தை அனைவரும் பயமின்றி அன்பு உருக அன்போடு வணங்குவோம்.
    இறைவனை முழுமையாக சரணடைவோம். வினையின்றி சிவபாதம் பற்றுவோம்

       அன்பே சிவம்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*