ஆன்மிகம்தமிழகம்

சுயம்புவாய் தோன்றிய குச்சனூர் சனீஸ்வரர்..

5 (100%) 1 vote

சுயம்புவாய் தோன்றிய குச்சனூர் சனீஸ்வரர்

தேனீ மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் சுரபி நதிக்கரையில் வீற்றிருக்கிறார் குச்சனூர் சனீஸ்வர பகவான். இங்கு ஆடி மாத திருவிழாவும், இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சனிபெயர்ச்சியும் முக்கிய திருவிழாக்களாகும். தினகரன் மான்மியம் என்ற பழமையான நூல் வாயிலாகவே, குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் பற்றிய தல வரலாற்றை அரிய முடிகிறது. முன்பொரு காலத்தில் தினகரன் என்ற மன்னன் திருமணம் முடிந்து பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லது இருந்திருகின்றான். கடவுளிடம் மனமுருகி வேண்டிகொண்ட மன்னனின் கனவில் ஒரு முறை அசரிரி  ஒலித்தது. உன் வீட்டுக்கு ஒரு அந்தண சிறுவன் வருவான், அவனை வளர்த்து வந்தால் குழந்தை பிறக்கும் என்றது அந்த குரல். அதன்படி ஒரு சிறுவன் வந்து சேர்கிறான் .அவனுக்கு சந்தரவதனன் என்ற பெயர் சூட்டி வளர்த்து வரும் வேளையில்,அரசிக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அவனுக்கு சதாகன்என்று பெயர் சூடினார். காலங்கள் உருண்டோட சந்தரவதனன் ஒரு மன்னனுக்கு உரிய வீரம் திறமை, விவேகத்துடன் இருந்ததால் அவுக்கி முடி சூட்டினான் மன்னன். இந்நிலையில் மன்னன் தினகரனுக்கு சனி தோழம் பிடித்தது.இதனால் பல சோதனைகளையும், துன்பங்களையும் அவன் சந்தித்தான். தனது வளர்ப்பு தந்தை அடையும் துன்பதைக் கண்டு மனமுடைந்த சந்தரவதனன், தந்தையின் துன்பம் நீங்க சுரபி நதிக்கரைக்கு சென்று சனியின் உருவத்தை நிறுவி வழிபட தொடங்கினான். அந்த வழிபாட்டில் மனமிரங்கிய சனீஸ்வரபகவான், அவன் கண் முன் தோன்றி,முற்ப்பிறவியில் செய்த  பாவ வினைகளுக்கு ஏற்பவே  இப்பிறவியில் சனி தோஷம் பிடிக்கிறது,இதன் காலம் ஏழரை நாஷிகை, ஏழரை நாட்கள் , ஏழரை மாதங்கள், ஏழரை ஆண்டுகள். தந்தை உன்தந்தை முற்ப்பிறவியில் செய்த பாவ வினைகளின் விளைவே இது என்றார். ஆனால் சந்தரவதனன் என தந்தைக்கு வரும் துன்பங்களை எனக்கு கொடுங்கள் நான் ஏற்றுகொள்கிறேன்  என்று சனி பகவானிடம் கோரிக்கை வைத்தான்.

ஒப்புக்கொண்ட சனீஸ்வர பகவான், சந்தரவதனுக்கு கடுமையான பல துன்பங்களையும், சோதனைகளையும் கொடுத்தார். அப்போதும் சந்தரவதனன், சனீஸ்வர வழிபாட்டை நிறுத்தவில்லை. சுரபி நதிக்கரையில் தீவிர வழிபாட்டில் இறங்கினான் ஒரு கட்டத்தில் மனமிரங்கிய சனிஸ்வர பகவான் சந்தரவதணன் முன் தோன்றி, அவனது துன்பங்களை களைந்ததுடன் பக்தர்கள் தங்களது குறைகளை உணர்ந்து இவ்விடத்திற்கு வந்து என்னை வணங்கினால், அவர்களுக்கு  சனிதோஷத்தால் வரும் துன்பங்களை குறைத்து முடிவில் நன்மைகளை அளிப்பேன். என்று சொல்லி மறைந்தார். சுயம்பு சனீஸ்வரருக்கு குச்சிபுல்லினால், ஒரு கூரை வேய்ந்தான் சந்தரவதனன். குச்சிபுல் கூரை என்பதே நாளடைவில் குச்சனூர் என்றானது. தேனியிலிருந்து 33  கிலோமீட்டர் தொலைவிலும் , வீரபாண்டி வழியாகவும், சின்னமனூர் வழியாகவும் செல்லலாம்,உப்புகொட்டை செல்லும் சாலையில் 5  வது கிலோமீட்டரில் உள்ளது குச்சனூர் சநீஸ்வரபஹவான் ஆலயம்.குச்சனூர் சனீஸ்வர பகவான் ஆலயத்தில் ஆடி மாதத்தில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது.அதனை ஆடி பெருந்திருவிழா என்பர். சிறப்பாக கொண்டாடப்படும் இந்த விழாவில் உலகம் முழுவதிலிமிருந்து இலட்சகணக்கான கலந்து கொண்டு சுயம்பு சனீஸ்வர பகவானை தரிசிப்பர். ஆடி மாதத்தில் வருகிற சனிக்கிழமைகளில் நாள் முழுவதும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். கோயிலில் விடந்தை மரம் தல மரமாகவும், கருங்குவளை மலர் தல மலராகவும், வன்னி இலை தல இலையகவும், உள்ளது. சநீஸ்வரபஹவனுக்கு காகம் வாகனமாகவும், எள் தானியமாகவும், இருக்கிறது. இதனால் இங்கு வரும் பக்தர்கள் எள் விளக்கு போடுவதும், கருப்பு வஸ்திரம் சாத்தி, காகங்களுக்கு எள்ளுசாதம் பிரசாதமாக படைத்து சனீஸ்வரனை வணகுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

Comment here