இந்தியாசினிமாதமிழகம்

சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீ தேவிக்கு சிலை

சுவிட்சர்லாந்து அரசாங்கம் அந்நாட்டில் இந்தியாவின் சுற்றுலாப் பயணிகளை அதிகரிக்கும் வகையில் நடிகை ஸ்ரீ தேவிக்கு சிலை வைக்க ஏற்பாடு செய்து வருகிறது.

இந்தியாவில் பல வெற்றிப் படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றவர் நடிகை ஸ்ரீ தேவி. இவர், தமிழ், தெலுங்கு, மலையாலம், இந்தி போன்ற மொழிகளில் நடித்து தனக்கென தனி முத்திரை பதிதுக்கொண்டார். அதனுடன், ஸ்ரீ தேவியின் சில படங்கள் வெளிநாடுகளில் ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்தது. அந்த வகையில், சுவிட்சர்லாந்தில் படமாக்கப்பட்ட சாந்தனி என்ற திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது. இதனையடுத்து, இந்தியாவில் இருந்து சுவிட்சர்லாந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து, நடிகை ஸ்ரீ தேவியை கவுரவிக்கும் வகையிலும், சுற்றுலாப் பயணிகளை மேலும் அதிகரிக்கும் நிலையிலும் அந்நாட்டு அரசு நடிகை ஸ்ரீ தேவிக்கு சிலை வைக்க ஏற்பாடு செய்து வருகிறது.

Comment here