இல்லறம்

சுவை மிகுந்த தேங்காய் பர்பி செய்ய…!

Rate this post

தேவையான பொருட்கள்:

தேங்காய் – 1 கப்
சர்க்கரை – 1 கப்
ஏலக்காய் – தேவையான அளவு
ரோஸ் வாட்டர் – தேவையான அளவு

செய்முறை:

தேங்காயைத் துருவி துருவல் எவ்வளவு உள்ளதோ அதே அளவு சர்க்கரை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் இரண்டையும் ஒன்றாகக் கலந்து கொள்ள வேண்டும்.

பிறகு பாத்திரத்தை அடுப்பிலேற்றி மிதமான தீயில் கிளற வேண்டும். கிளறிக் கொண்டே அடிக்கடி கலவை எப்படி உள்ளது எனக் கவனிக்க வேண்டும். கலவையை எடுத்தால் சர்க்கரை கம்பி கம்பியாக தோன்றும் நிலை வரும். அப்போது அடுப்பை விட்டு இறக்கி அதில் ஏலக்காயை பொடித்துத் தூவ வேண்டும்.

பிறகு ரோஸ் வாட்டர் சிறிது சேர்க்க வேண்டும். ஒரு தட்டில் நெய் பூசி கலவையை கொட்டி பரப்பி சூடாக இருக்கும்போதே வேண்டிய உருவில் வெட்டிக் கொள்ள வேண்டும். சுவை மிகுந்த தேங்காய் பர்பி தயார்.

Comment here