சூரியமின்சக்தி

Rate this post

மின் உற்பத்தியின் தேவை  அதிகரித்து வருவதற்கு பலவேறு கரணங்கள் உள்ளன. புதிய தொழில் சாலைகள்,   பெருகி வரும் குடியிருப்பு பகுதிகள் புதிய தொழல்நுட்பத்தில் உருவாக்கப்படும் மின்சாதன பொருட்களும் அவற்றின் உபயோகத்தாலும் மின் தேவை அதிகரித்து வருகிறது. இதனால் மின் உற்பத்தியும் அதிக அளவில் தேவைபடுகிறது. நமது நாட்டில் அனல் மின்நிலையங்கள் மூலமும், நீர், காற்று, சூரியஒளி முலமும் தயாரிக்கப்படுகிறது இப்பொழுது சூரியமின்சக்தி குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. சூரிய ஒளி மின்சக்தியை அதிக அளவில் பயன்படுத்தப்படவேண்டும் என்று சுற்றுசூழல் ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.. சூரிய ஒளி மின்சக்தியை நடைமுறைபடுத்துவதில்  உள்ள தொழில்நுட்பங்களும்  தான்  அதிக ஆர்வம் காட்டாதததற்கு   காரணம்.   சூரியஒளி மின்சாரம் தயாரிப்பதற்க்குப் பொருளாதார சிக்கலும் ஒரு காரணமாகவும் கூறப்படுகிறது.

இதனலேயே சூரியசக்தி மின்சாரம் என்னும் சுற்றுசூழல் பாதிப்பில்லாத சூரிய ஒளி மின்சார உற்பத்தி இன்னும் பரவலகாமல் உள்ளது. சூரிய ஒளி மின்சக்தியை தயாரிக்கும் முறையை எளிதாக வேண்டும் அதற்க்கான தொழில் நுட்பத்தை கண்டறிய வேண்டும். தற்போது கட்டுமானத்துறையில்   திட நிலையில் காணப்படும் சோலார் தகடுகளுக்கு பதிலாக, திரவநிலையில் காணப்படும் சோலார் பெயிண்டுகள் மூலம் சூரிய ஒளி மின்சக்தியை தயாரிக்கலாம் என்ற உத்தியை கட்டுமான துறையினர் கண்டறிந்துள்ளனர். சூரிய கதிர்களிலிருந்து வெளிப்படும் ஒளி ஆற்றலிலிருந்து மின்சாரத்தை உருவாக்கும்  முறையில் இது வரை சூரிய சக்தி மின் தகடுகளே பயன்படுத்த பட்டு வந்தன.  ஆனால், இத்தகைய சூரிய சக்தி மின்சார உற்பத்திக்கு திரவ நிலையில் சோழர் பேனல்கள் உருவாகும் காலம் மிக விரைவில் வருள்ளது என்கின்றனர். தளங்களிலும், சுவர்களிலும் சோலார்  பேனல்களாக செயல்படும்  வகையிலான பெயிண்ட்ஸ் பூசும் பொது அதிலிருந்து மின்சக்தியைஉற்பத்தி செய்ய இயலும் என்று தெரிவிக்கின்றனர் அறிவியலாளர்கள். ஒளிஆற்றலை மினாற்றலக மாற்றும் திறன் கொண்ட சோலார் செல்களின் தொகுப்பே  சோலார் பேணல் என சொல்லப்படுகின்றது. பொதுவாகவே  பாலி கிரிஸ்டலைன் சிலிகான் என்னும் வேதிப்பொருளை பயன்படுத்திதான் இத இத்தகைய சூரிய சக்தி மின் தகடுகளை உருவாக்குகின்றனர்.

மெல்லியதான இந்த சூரிய சக்தி மின் தகட்டை உற்பத்தி செய்ய அதிக செலவு பிடிக்கும் என்கிறார்கள். இந்த செலவை குறைத்து சூரிய சக்தி மின் தகட்டை உருவாகும் முயற்சிகளும் உலகெங்கிலும் நடந்து வருகின்றன. இந்த முயற்சியின் விளைவாக, பிளாஸ்மோனிக்  தன்மை கொண்ட ஆர்கானிக் வகை பொருட்களை சூரியசக்தி மின் தகடாக பயன்படுத்தினால்  அதிக அளவிலான மின் ஆற்றலை உற்பத்தி செய்ய முடியும். என்றும், இதற்க்கு ஆகும் செலவும் மிகவும் குறைவு என்றும் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும், இது ய்ஹிரவவடிவில் காணப்படுவதால் பயபடுதுவதும் எளிது, திரவ வடிவில் இருக்கும் சூரிய சக்தி மின் தகட்டைச் சுவர், தரை என எந்த பகுதியிலும் வண்ணம் போல் எளிதில் பூச முடியும். சூரிய ஒளி படும் அனைத்து இடங்களிலும் இதை பூசினால் அதிக அளவில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சுழல் உருவாகும்.  இது மட்டுமன்றி, கார்பனை அடிப்படையாகக் கொண்ட சிறு மூலக்கூறுகள், போளிமேர்கள் ஆகியவற்றை பயன்படுத்தி மெல்லிய பிலிம் வகை சோலார் பேனேல் உருவாகும் முயற்சியும், மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு செலவும் மிக குறைவாகவே ஆகும் என நம்பபடுகிறது.  இந்நிலையில் சோலார் கொடிகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் கண்டுபிடிப்புக்கும் வெற்றி கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அனேக செயற்கை இலைகளைக் கொண்டு கொடிகளாகதயாரிக்கப்பட்டுள்ள இதற்கு” சோலார் ஐவி “ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த கொடிகளை வீட்டின் வெளிப்புறத்தில் உள்ள சுவர்களில் படர்திவிட்டால் போதும் அவற்றில் படும்  சூரிய ஒளியிலிருந்து அவை மின்னாற்றலைப்  பிரித்து மின்சாரம் உற்பத்தி செய்ய உதவும்.   இயற்கையான கொடிகளைப்  போன்று, கண்ணை கவரும் விதமாக அழகாக படர்ந்து இருக்கும். வீட்டிற்கு தேவையான மின்சாரத்தையும்  மின்சாரத்தையும் உற்பத்தி செய்து கொள்ளலாம். இதில் போட்டோவோல் டெயிக்  பேனேல்கள் எனப்படும் நுட்பமான மெல்லிய தகடுகள் போருத்தப் பட்டிருக்கும்.

இவை சூரிய ஒளியிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. நமக்கு எவ்வளவு மின்சாரம் தேவையோ அதற்கு ஏற்ப  இத்தகைய கொடிகளை படரவிடலாம். பல வண்ணங்களிலும், வடிவங்களிலும் இத்தகைய கொடிகள் கிடைக்கின்றன. இதனால் எந்த பதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை. இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுள்ளவர்கள், இருகட்ட ஒப்புதல் கிடைத்த பின்னர், இது பயன்படிற்கு வந்துவிடும் என கூறுகின்றனர்.

sanjeevi energy conversion and management

contact- 9843797700

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*