ஆன்மிகம்

சூரிய நமஸ்காரம் மந்திரம்

சூரிய நமஸ்கார மந்திரம் தமிழில்: ‘காசினி இருளை நீக்கும் கதிரொளியாகி எங்கும் பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தை நல்கும் வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த தேசிகா எனைரட்சிப்பாய் சேங்கதிரவனே போற்றி’ சூரிய நமஸ்காரம் மந்திரம் சமஸ்கிருதத்தில்: ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே பாசஹஸ்தாய தீமஹி தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத் ஓம் பாஸ்கராய வித்மஹே திவாகராய தீமஹி தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத் சூரிய பகவானின் இந்த மந்திரத்தை தொடர்ந்து அவரைப் பற்றிய சிறப்பான தகவல்கள் சிலவற்றை காண்போம்.

 

சூரியன் சிவபெருமானின் வலது கண்ணாக இருக்கின்றார் என்பதை புராணங்கள் கூறுகின்றது. சூரியனை சிவனோடு ஒப்பிட்டு சிவசூரியன் என்றும், விஷ்ணுவோடு ஒப்பிட்டு சூரியநாராயணர் என்றும் அழைப்பார்கள். சூரிய பகவானை வழிபடும் விரதமானது ரதசப்தமி ஆகும். இது தை மாதத்தில் வரும் சப்தமி திதி அன்று கொண்டாடப்படுகின்றது. ரதசப்தமி அன்று சூரியன் பயணிக்கும் தேரை இழுத்துச் செல்லும் 7 குதிரைகளும் ஒரு சேர வடக்கு நோக்கி திரும்பி பயணிப்பதை தொடங்குகின்றன.

இந்த நாளில் சூரிய உதயத்தில் புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது சிறப்பு சேர்ப்பதாகும். கணவனை இழந்தவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால் அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை வராது என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. ரத சப்தமி விரதம் சூரிய உதயத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும். சர்க்கரைப் பொங்கல், வடை, பாயாசம் இவற்றை சூரியனுக்கு நைவேத்தியமாக படைக்கலாம். இந்த தினத்தில் கோதுமையால் செய்யப்பட்ட பண்டங்களை பசுவிற்கு தானமாகக் கொடுப்பது நல்லது.

 

வாசலில் சூரிய ஒளி படும் இடத்தில் சூரியனுக்கு நைவேத்தியம் படைப்பது இன்னும் சிறந்தது. ரதசப்தமி அன்று தொடங்கும் தொழில்கள் மிகவும் சிறப்பாக நடைபெறும். இந்த நாளில் நாம் மற்றவர்களுக்கு செய்யக்கூடிய தனமானது பல மடங்கு புண்ணியத்தை நமக்கு தேடித்தரும்.  இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் துன்பப்படாமல் வாழ்வதற்கு தேவையான அருளை வழங்க வேண்டுமென்று நாம் அனைவரும் அந்த சூரிய பகவானை பிராத்திப்போம்.

Comment here