சூரிய வழிபாடு பிறந்த கதை!

5 (100%) 1 vote

ஆதி மனிதனின் முதல் வழிபாடு சூரிய வழிபாடாகத் தான் இருக்க முடியும். ரிக்வேத காலத்துக்கும் முன்பிருந்தே இந்த வழிபாடு இருந்து வருகிறது. இந்த வழிபாடு எப்படி ஏற்பட்டது என்பது பற்றி அறியப்படவில்லை. கி.மு. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சூரியன், அக்னி, வருணன் ஆகியோரை இந்தியர்கள் வழிபட்டு வந்துள்ளனர்.

வெப்ப மண்டல பகுதியில் அமைந்தது தான் இந்தியா. அதனால் நம் நாட்டில் சூரிய வழிபாடு ஏற்பட்டதில் ஆச்சரியத்திற்கு இடமில்லை. பல நோய்களை சூரிய கிரகணங்கள் குணப்படுத்துவதாக இந்தியாவில் தோன்றிய அதர்வண வேதம் குறிப்பிடுகிறது. உபநிஷத்துக்களும், புராண இதிகாசங்களுக்கும் சூரியனின் புகழைப் பேசுகின்றன. பிற தெய்வங்களைப் போல் அல்லாமல் சூரியன் கண்ணெதிரே தோன்றும் தெய்வமாக விளங்குகிறான். அதனால், அந்த சூரியனை இந்தியர்கள் வழிபட ஆரம்பித்திருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இன்றைய அறிவியல் ரீதியாக சூரியன் ஒரு கோள். அதை தெய்வமாக வழிபடுவது ஏற்றுக் கொள்ள முடியாதது என்று இன்றைய தலைமுறை வாதிடலாம். ஆனால் அதில் தவறில்லை என்கிறது வேதம். இந்திய வேத காலத்தில் வாழ்ந்த ரிஷிகள் சூரியனே தண்ணீருக்கெல்லாம் ஆத்மா என்று குறிப்பிடுகிறார்கள்.
வேதத்தில் காணப்படும் உண்மைகள், நவீன விஞ்ஞான உண்மைகளுக்கு முரணாக இல்லை என்பதை நாம் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.

சூரிய ஒளி நிறப்பிரிகையில் 7 வண்ணமாகப் பிரிகிறது. 7 வண்ண ஒளியின் சேர்க்கையே சூரிய ஒளி, சூரியனுக்கு 7 குதிரைகள் என்று வேதம் வர்ணிப்பதன் சூட்சமம் இதுவே! குதிரையை அசுவம் என்பார்கள். அசுவம் என்ற சொல்லுக்கு வண்ணம் என்றும் பொருள் உண்டு.

பாரசீகத்தில் தங்கிவிட்ட ஆரிய குலத்தினர் சூரியனை வழிபட்டார்கள் என்றாலும், அக்னிக்குத்தான் அவர்கள் முக்கியத்துவம் தந்தார்கள். இந்தியாவுக்கு வந்த ஆரியர்கள் திராவிடர்களுடன் கலந்து விக்ரக ஆராதனையை மேற்கொண்டார்கள். சூரியனை, விஷ்ணுவின் அவதாரமாக ஏற்றுக் கொண்டார்கள்.

சூரிய வழிபாட்டினால் தோல் நோய், கண் நோய்கள் குணமாகிவிடும் எந்று பராசீகர்கள் நம்பினார்கள். பாரசீக மத குருக்களான மாகாஸ்கள், சூரியவழிபாட்டின் மூலம் சிகிச்சை செய்யும் மருத்துவக்களாக விளங்கினர்.

ஒருமுறை பஞ்சாப்பை ஆண்ட மன்னன் ஒருவனுக்கு தோல் நோய் ஏற்பட்டது. அவன் மாகாஸ்களை வரவழைத்தான். நோய் குணமாகவே இப்போது பாகிஸ்தானில் உள்ள மூல்தான் நகரில் அவன் சூரியனுக்காகவே ஒரு கோவில் கட்டுவித்தான். 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த ஆலயங்கள் பண்டைய இந்தியாவில் சூரியனுக்காக ஏற்பட்ட முதல் கோவில். இந்த ஆலயம் அவுரங்கசீப் காலத்தில் அழிவுற்றது.

அதன்பின், மூல்தானில் இருந்து காஷ்மீருக்கு சூரிய வழிபாடு பரவியது. சூரியனுக்காக கட்டிய புராதனக் கோவில்களுள் ஒன்று ஒரிசாவில் உள்ள கோனார்க் கோவில். கலிங்கத்தை ஆண்ட நரசிங்க தேவன் (கி.பி.1238-64) இதைக் கட்டினான்.இப்போது இந்த கோவிலின் ஒரு பகுதி மட்டுமே மிஞ்சி இருக்கிறது. இந்த ஆலயத்தில் உள்ள சிற்பங்கள் உலகில் வேறு எங்கும் காணக் கிடைக்காத வேலைப்பாடுகள் கொண்டவை.

தமிழ்நாட்டிலும் சூரிய பகவானுக்கு கோவில் இருக்கிறது. கும்பகோணத்தை அடுத்துள்ள சூரியனுக்கென்று தனி ஆலயமே இருக்கிறது.சூரியனைப் பரம்பொருளாக ஆதித்ய ஹிருதயம் கூறுகிறது மார்க்கண்டேய புராணம். பவிஷ்ய புராணம் ஆகியவையும் சூரிய வழிபாட்டை விவரிக்கின்றன. மந்திரங்களில் மிக சக்தி வாய்ந்ததாகக் கருதப்படும் காயத்ரி, சூரியனுக்கு உகந்த மந்திரம் தான்!

சூரிய நமஸ்காரம் என்பது உடற்பயிற்சி, யோகப் பயிற்சியுடன் கூடிய வழிபாடு. இன்று இது பிற நாடுகளிலும் பரவியுள்ளது.தை மாதம் முதல் நாளன்று சூரியன் மகர ராசிக்குள் (உத்தராயணம்) பிரவேசிக்கின்றான். அன்றைய தினம் நாம் பொங்கல் பண்டிகை கொண்டாடி சூரியனுக்கு நன்றி செலுத்துகிறோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*