சென்னையின் இசைத் திருவிழாக் காலம்

Rate this post

டிசம்பர் மாதம், சென்னையின் இசைத் திருவிழாக் காலம். ஒவ்வோர் ஆண்டும் உலகெங்கிலும் உள்ள இசைக்கலைஞர்களும் இசை வல்லுநர்களும் கலா ரசிகர்களும் சென்னைக்கு வந்திருந்து இசை நாட்டிய காலச்சாரத் திருவிழாவில் பங்கேற்பதுண்டு. 
அதே போன்றதொரு கருத்தாக்கத்தை முன்வைத்து, வரலாறு, கலை,இலக்கியம், கட்டக்கலை உள்ளிட்ட இந்தியப் பாரம்பரிய அம்சங்களை மையப்படுத்தி, அது குறித்த துறைசார் வல்லுநர்களின் உரைகளை கலா ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை முடிவு செய்தது. அதன் விளைவாக “பேச்சுக் கச்சேரி” ஆரம்பித்தது
 ”சோழவளநாடு கலையுடைத்து” தமிழ்ப் பாராம்பரிய அறக்கட்டளை நடத்தும் ஏழாவது பேச்சுக் கச்சேரி. சோழர்களின் கலை, கட்டட, இலக்கிய பங்களிப்புகளை பரவலான அறிதலுக்கான ஒரு சிறு முயற்சி.  தமிழ் இணையக் கல்விக்கழகத்துடன் இணைந்து, தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் வளாகத்தில் டிசம்பர் 15 & 16 நாட்களில் நடக்கவிருக்கிறது.
முனைவர் இரா நாகசாமி,  முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன், முனைவர்  பாலுசாமி, முனைவர் சித்ரா மாதவன் முதலானோர் பேச இருக்கிறார்கள்.
விரிவான நிகழ்ச்சி நிரலை இத்துடன் இணைத்திருக்கிறோம்.  அனைவரும் வரலாம். அனுமதி இலவசம்.தங்களது நாளிதழில் வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறோம். 
அன்புடன்
தமிழ்ப் பாராம்பரிய அறக்கட்டளைக்காக
ரவிசங்கர்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*