சென்னையில் ஒரே மேடையில் 1400 கிராமிய கலைஞர்கள் ஒயிலாட்டம் ஆடியது கின்னஸ் சாதனை

Rate this post
சென்னையில் ஒரே மேடையில் 1400 கிராமிய கலைஞர்கள் ஒயிலாட்டம் ஆடியது கின்னஸ் சாதனையில் இடம்பெறவுள்ளது.
சென்னை ஆவடி அடுத்த திருநின்றவூரில் உள்ள தனியார் கல்லூரியில் சென்னையில் ஒயிலாட்டம் என்ற  நிகழ்ச்சி சினிமா பின்னணி பாடகர் வேல்முருகன் தலைமையில்  நடைபெற்ற ஒயிலாட்டம் நடனத்தில்  4 வயது முதல் 55 வயது வரை உள்ள 1418 ஒயிலாட்ட கலைஞர்கள் தமிழகம் முழுவதும்  பல் வேறு  மாவட்டம் களில் லிருந்து இருந்து கலந்து கொண்டு நடனமாடி கின்னஸ் சாதனை செய்தனர்.
ஏற்கனவே 700 கலைஞர்கள் பங்கேற்று 7 நிமிடங்கள் நடனமாடியதே சாதனையாக இருந்தது. அதனை முறியடிக்கும் விதமாக 1418 ஒயிலாட்ட கலைஞர்கள் ஒன்று கூடி 7 நிமிடங்கள் தொடர்ந்து தமிழ் பாடல்களுக்கு நடனமாடி கின்னஸ் சாதனை செய்தனர். இதனை ஆசிய சாதனை புத்தகத்தின் பொருப்பாளர் விவேக் அவர்களின் மேற்பார்வையில் சாதனை பதிவு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் கலந்து கொண்டு  சாதனைக்கான சான்றுகளை வழங்கினார்.இவ்விழாவில்  திரைப்பட இயக்குனர்  மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரன்,இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், விஜிபி சந்தோசம், நகைச்சுவை நடிகர் தம்பி ராமையா, கவிஞர் பிறைசூடன்  உள்ளீட்டோர் கலந்து கொண்டனர்.
பேட்டி:  சினிமா பின்னணி பாடகர் வேல்முருகன்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*