பொது

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 குறைவு

Rate this post

சென்னை: சர்வதேச சந்தையில் சில தினங்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இதனால், உள்ளூரிலும் தங்கத்தின் விலை மாறுபடுகிறது. அதன்படி சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை, இன்று (ஜன.,24) சிறிதளவு குறைந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.8 ம், சவரனுக்கு ரூ.64 ம் குறைந்துள்ளது.

இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.3089 ஆகவும், 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ.32,430 ஆகவும் குறைந்துள்ளது. ஒரு சவரன் ரூ.24,712 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று ஒரு கிராம் வெள்ளி விலை 50 காசுகள் குறைந்து ரூ.42.20 ஆக உள்ளது.

Comment here