சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு!

Rate this post

இந்தியாவில் மூன்று உயர்நீதிமன்றங்கள் 1862ல் பிரிட்டிஷ் ஆட்சியின் போது நிறுவப்பட்டன. இதில் சென்னை உயர்நீதிமன்றமும் ஒன்று. இங்கு காலியாக உள்ள 82 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிட விபரம்: நீதிபதிகளின் தனி உதவியாளர் பிரிவில் 71ம், பதிவாளர்களுக்கான உதவியாளர் பிரிவில் 10ம், துணை பதிவாளர்களுக்கான தனி உதவியாளர் பிரிவில் 1ம் சேர்த்து மொத்தம் 82 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வயது: 2018 ஜூலை 1 அடிப்படையில் விண்ணப்ப தாரர்கள் 18 – 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: 
நீதிபதிகளுக் கான தனி உதவியாளர் பிரிவுக்கு, பட்டப்படிப்புடன், முதுநிலை ஆங்கில தட்டச்சு மற்றும் சுறுக்கெழுத்து பயிற்சி முடித்திருக்க வேண்டும். இதனுடன் கம்ப்யூட்டர் ஆன் ஆபிஸ் ஆட்டோமேஷனிலும் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
* பதிவாளருக்கான தனி உதவியாளர் பதவிக்கு, ஏதாவது ஒரு பட்டப்படிப்புடன் ஆங்கிலம் மற்றும் தமிழில் முதுநிலை தட்டச்சு மற்றும் சுறுக்கெழுத்து பயிற்சி முடித்திருக்க வேண்டும். இதனுடன் கம்ப்யூட்டர் ஆன் ஆபிஸ் ஆட்டோமேஷனிலும் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
* இதே தகுதியே, துணைப் பதிவாளருக்கான தனி உதவியாளர் பிரிவுக்கும் தேவைப்படும்.

தேர்ச்சி முறை: ‘ஸ்கில் டெஸ்ட்’ மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட மாதிரி யிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, recruitment.mhc@gov.in என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பக்கட்டணம் 500 ரூபாய். இதனை ‘டிடி’யாக செலுத்த வேண்டும்.

கடைசி நாள் : 2018 மே 4.

விபரங்களுக்குwww.hcmadras.tn.nic.in/Notf56of2018.pdf

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*