சென்னை – சேலம் எட்டு வழிசாலைக்கு சாலைக்கு எதிர்ப்பு

Rate this post

சென்னை – சேலம் எட்டு வழிசாலைக்கு சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம் ஆட்சியரிடம் மனு கொடுத்த வந்த விவசாயிகளை தடுத்தி நிறுத்தியதால் தர்னா போராட்டம்
சென்னை – சேலம் எட்டு வழிசிலைக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் 59 கிலோ மீட்டர் தூரம் 1000-ஏக்கர்க்கு மேல் நிலங்களை கையகபடுத்த அரசு திட்டமிட்டு நிலங்களை கையபடுத்தி வந்த நிலையில் உயர்நீதிமன்றம் விவசாயிகள் எதிர்ப்பை மீறி எட்டு வழிசாலை திட்டத்திற்க்கு தடை விதித்துள்ளது
இந்த நிலையில் இன்று காஞ்சிபுரம் ஆட்சியரை நேரின் மனு கொடுக்க எட்டு வழி சாலை எதிர்ப்பு இயக்கம் மற்றும் விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோர் மனு கொடுக்க வந்தனர் அவர்களை தடுத்து நிறுத்தியதால் போலீசார்க்கும் போராட்டகாரர்களுக்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது 
மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்கவிடாமல் தடுத்ததால் ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர் 
இதனை தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டார்
காஞ்சிபுரம் டி.எஸ்.பி போராட்டகாரர்களிம் பேச்சு வார்த்தை நடத்தி இன்று ஆட்சியர் அலுவலகத்தில் இல்லை அவர் இருக்கும்  போது நீங்கள் மனு கொடுக்கலாம் இன்று வீட்டிற்க்கு செல்லலாம் என கூறியதால் போராட்டகாரர்களுக்கும் போலீசார்க்கு வாக்குவாதம் ஏற்பட்டது 
இதனை தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலரை சந்தித்து மனு கொடுத்தனர்
இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*