சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்தரின் செய்தியாளர் சந்திப்பு :

Rate this post

 

நேற்று தென் மேற்கு வங்க கடலில் நிலவி இருந்த வழுவான காற்றழுத்த தாழ்வி பகுதி வழுக்குறைந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக தமிழக உள் பகுதிகளில் நிலவுகிறது,இது தொடர்ந்து மேற்கு நோக்கி நகர்ந்து வழுவிழக்கும்.
வரும் 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் பரவலாகவும் தென் தமிழகத்தில் மிதமான மழையும் இருக்கும்.
கிருஷ்ணகிரி,விழுப்புரம்,சேலம்,ஈரோடு,
திருவண்ணாமலை புதுவை,காஞ்சிபுரம்,கரூர்,
தருமபுரி,நாமக்கல், வேலூர், நீலகிரி மாவட்டத்தில் ஒர் இரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளுவர் மாவட்டம் சோழவரம் மற்றும் மாதவரம் பகுதிகளில் தலா 12 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.மேலும் விழுப்புரம் வானூர், திருவள்ளுவர் மாவட்டம் செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் 11செ.மீட்டர் மழையும்,திருவள்ளுவர் மாவட்டம் பொன்னேரியில் தலா 10 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
மேலும் சென்னை டி.ஜி.பி அலுவலகம்,நுங்கம்பாக்கம்சென்னை விமான நிலையம்,சென்னை அண்ணா பல்கலைக்கழகம், விழுப்புரம் மரக்காணம்,திண்டிவனம்,
கடலூர் பன்ருட்டி உள்ளிட்ட இடங்களில் தலா 9செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
இந்த காலகட்டத்தில் பெய்ய வேண்டிய மழையில் இயல்பை விட சென்னையில் 60%மழை குறைவாக இருந்தது, தற்போது பெய்துள்ள மழையால் 45%மாக அது குறைந்து உள்ளது, வரக்கூடிய நாட்களில் மழை அதிகரிக்கும் பட்சத்தில் இயல்பான மழை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த இரண்டு நாட்களாக பெய்துள்ள மழையால் சென்னையில் உள்ள நீர் நிலைகளுக்கு பரவலாக நல்ல மழை கிடைத்துள்ளது.
வடகிழக்கு பருவமழையை பொருத்த வரை தமிழகத்தில் அக்டோபர் 1முதல் இன்று வரை 32செ.மீட்டர் இருக்க வேண்டும், ஆனால் 26செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது, இது இயல்பை விட 17% குறைவு.
சென்னையை பொறுத்து வரை இந்த காலகட்டத்தில் இயல்பான மழை அளவு 32செ.மீட்டர்,பெய்துள்ள மழை அளவு 26 செ.மீட்டர்,இது இயல்பை விட 45% குறைவு….

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*