பொது

சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு!

சென்னை மெட்ரோ ரயிலில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தற்போது கட்டணத்தை அதிகபட்சமாக 10 ரூபாய் அளவுக்கு குறைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் 45 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் இயக்க திட்டமிடப்பட்டது. அதில் ரயில்கள் 35 கி.மீ தூரத்திற்கு இயக்கப்படுகின்றன. விமான நிலையம் – வண்ணாரப்பேட்டை 23 கி.மீ, செண்ட்ரல் – பரங்கிமலை 22 கிலோ மீட்டரும் உள்ளன. மெட்ரோ ரயிலுக்கான கட்டணம் குறைந்தது 10 ரூபாய் முதல் அதிகபட்சம் 70 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. கட்டணம் அதிகமாக இருப்பதாக பயணிகள் குற்றம்சாட்டி வந்த நிலையில் கட்டணத்தை குறைத்து மெட்ரோ நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. அதன் விவரங்கள் பின்வருமாறு :

விமான நிலையத்திலிருந்து..

மீனம்பாக்கம்    – ரூ.10

நங்கநல்லூர்       – ரூ.20

ஆலந்தூர், கிண்டி, சின்னமலை,சைதாப்பேட்டை, நந்தனம், தேனாம் பேட்டை – ரூ. 40

டிஎம்எஸ், ஆயிரம் விளக்கு, எல்ஐசி, அரசினர் தோட்டம், செண்டரல் – ரூ. 50

உயர்நீதிமன்றம், மண்ணடி, வண்ணாரப்பேட்டை – ரூ. 60

ஈக்காட்டுத்தாங்கல், அசோக்நகர், வடபழனி, அரும்பாக்கம் – ரூ. 40

ஷெனாய் நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா, எழும்பூர் – ரூ.60

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து…

விமானநிலையம் – ரூ. 50

மீனம்பாக்கம், நங்கநல்லூர், ஆலந்தூர், கிண்டி, சின்னமலை, சைதாப்பேட்டை – ரூ. 40

நந்தனம், தேனாம்பேட்டை, டிஎம்எஸ், ஆயிரம்விளக்கு, எல்.ஐ.சி, அரசினர் தோட்டம், செண்டரல் – ரூ. 40

உயர்நீதிமன்றம், மண்ணடி, வண்ணாரப்பேட்டை – ரூ. 50

ஈக்காட்டுத்தாங்கல் – ரூ. 40

அசோக்நகர் – ரூ.30

அரும்பாக்கம், கோயம்பேடு – ரூ. 10

வட பழனி, திருமங்கலம், அண்ணா நகர் டவர் – ரூ. 20

அண்ணாநகர் கிழக்கு – ரூ.30

ஷெனாய் நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா, எழும்பூர், பரங்கி மலை – ரூ. 40

எழும்பூரில் இருந்து…

விமான நிலையம் – ரூ. 50

மீனம்பாக்கம் – ரூ. 60

நங்கநல்லூர் ரோடு, ஆலந்தூர், கிண்டி – ரூ.50

சின்னமலை, சைதாப்பேட்டை, நந்தனம், தேனாம்பேட்டை, டி.எம்.எஸ் – ரூ. 40

ஆயிரம் விளக்கு, எல்.ஐ.சி – ரூ.30

அரசினர் தோட்டம் – ரூ. 20

செண்ட்ரல் – ரூ. 10

உயர்நீதிமன்றம், மண்ணடி – ரூ.30

ஈக்காட்டுத்தாங்கல், அசோக்நகர் – ரூ. 50

வட பழனி, அரும்பாக்கம், கோயம்பேடு,திருமங்கலம் -ரூ. 40

அண்ணாநகர் டவர், அண்ணா நகர் கிழக்கு – ரூ. 30

ஷெனாய் நகர் – ரூ.20

பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம் – ரூ.10

பரங்கி மலை – ரூ.50

செண்டரலில் இருந்து…

விமான நிலையம், மீனம்பாக்கம், நங்கநல்லூர் ரோடு, ஆலந்தூர் – ரூ. 50

கிண்டி, சின்னமலை, சைதாப்பேட்டை, நந்தனம், தேனாம்பேட்டை – ரூ.40

டி.எம்.எஸ் – ரூ.30

ஆயிரம் விளக்கு, எல்.ஐ.சி – ரூ.20

அரசினர் தோட்டம்,உயர்நீதிமன்றம்,எழும்பூர் – ரூ. 10

மண்ணடி, வண்ணாரப்பேட்டை – ரூ.20

ஈக்காட்டுத்தாங்கல், அசோக்நகர், வடபழனி, அரும்பாக்கம் – ரூ. 50

கோயம்பேடு பேருந்து நிலையம், திருமங்கலம், அண்ணாநகர் டவர், அண்ணாநகர் கிழக்கு, பரங்கிமலை – ரூ.40

ஷெனாய் நகர் , நேரு பூங்கா – ரூ.20

Comment here