அரசியல்

சென்னை வந்தார் அமித் ஷா… ட்விட்டரில் கடும் எதிர்ப்பு!

Rate this post

சமூக வலைதளமான ட்விட்டரில் #GobackAmitShah எனும் ஹாஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. பாஜகவை வலுப்படுத்தும் நோக்கில் தமிழகம் வந்துள்ள பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவிற்கு எதிராக தற்போது ட்விட்டரில் பதிவுகள் போடப்பட்டு வருகின்றன.

முன்னதாக, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரி தமிழகம் போராட்ட களமாகி இருந்தபோது பிரதமர் மோடி தமிழகம் வந்தார். திருவிடந்தையில் ராணுவ கண்காட்சியை திறந்து வைப்பதற்காக வந்த அவர் காவிரி குறித்து எதுவும் பேசவில்லை. அப்போது திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் சில அமைப்புகள் கருப்பு நிற ராட்சச பலூனை பறக்கவிட்டும், கருப்பு கொடிகளை காட்டியும் மோடி திரும்பிப் போக வேண்டும் என போராட்டம் நடத்தினர். அப்போது ட்விட்டரில் உலக அளவிலான ட்ரெண்டிங்கில் #GoBackModi ஹாஷ்டேக் முதலிடம் பெற்றது.

இந்நிலையில், மத்தியில் 4 ஆண்டு கால ஆட்சியை நிறைவுசெய்துள்ள பாஜக, 2019 மக்களவைத் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகிறது. மாநிலங்களின் கள நிலவரங்களை புரிந்துகொள்ளும் நோக்கில், அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஏற்கெனவே 2 முறை அமித்ஷாவுடைய தமிழக பயணம் ரத்தான நிலையில் இன்று அவர் தமிழகம் வரவுள்ளார்.

இந்நிலையில், ஒன்றரை ஆண்டுகள் கழித்து தமிழகம் வரவுள்ள அமித்ஷாவிற்கு எதிராக #GobackAmitShah எனும் ஹாஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. தற்போதைய நிலவரப்படி, இந்திய அளவில் ட்ரெண்டாகும் இரண்டாவது ஹாஷ்டாக இது உள்ளது.அ

Comment here