இந்தியாஉலகம்தமிழகம்தொழில்நுட்பம்பொது

செல்போன் தொடர்ந்து பயன்படுத்தினால் புற்றுநோய் ஏற்படும் : ஆய்வாளர்கள் எச்சரிக்கை

Rate this post

செல்போனில் தொடர்ந்து பேசினால் கதிர்வீச்சு தாக்கத்தினால் மூளை புற்றுநோய் ஏற்படும் என ஆய்வாளர்கள் அதிர்ச்சித் தகவல் தெரிவித்துள்ளனர்.

மனிதர்கள் செல்போன் இன்றிய வாழ்க்கையை நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு மனித வாழ்வியலோடு செல்போன் ஒன்றிணைந்து விட்டது. செல்போன் தொடர்ந்து பயன்படுத்துவதினால் எம்மாதிரியான விளைவுகள் ஏற்படும் என தொடர் ஆய்வுகள் செய்யப்பட்டு வந்தது. இதில், செல்போன் மட்டுமில்லாது, செல்போன் கோபுரங்களின் கதிர்வீச்சும் மக்களை பாதிக்கும் என அறியப்பட்டது. குறிப்பாக, ஒருவர் 20 முதல் 30 நிமிட நேரம் தொடர்ந்து செல்போன்களை பயன்படுத்தினால் அவருக்கு 10 ஆண்டுகளில் மூளை புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. செல்போன் அறிமுகப்படுத்தப்பட்ட 1985-ம் ஆண்டு முதல் தற்போது வரை நடந்த ஆய்வில் மூளை புற்றுநோய் பாதிப்பு தொடர்ந்து மக்களிடம் அதிகரித்து வருகிறது என ஆய்வில் தெரிய வருகிறது. பிரான்ஸ் உள்ளிட்ட சில நாடுகளில் குழந்தைகள் 12 வயது வரை செல்போன்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. செல்போனை அருகில் வைத்து தூங்குவதாலும், வாகனங்களில் போகும்போது பயன்படுத்துவதாலும் கதிர்வீச்சுக்கு ஆளாகும் நிலை உள்ளது என பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் ஆய்வில் வெளியாகி உள்ளது.

Comment here