பிரத்யகம்

செல்லிடப்பேசி சேவையில் மாணவர்களுக்கு சிறப்புச் சலுகை: பி.எஸ்.என்.எல்.

மாணவர்களுக்கு சிறப்பு செல்லிடப்பேசி சேவை திட்டத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி, செல்லிடப்பேசியை பயன்படுத்தும் மாணவர்கள் ரூ.118-க்கு ரீசார்ஜ் செய்தால், 1 ஜிபி இணைய வசதியை 30 நாள்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்காக ரூ.10-க்கு அழைப்புகளை பேசிக் கொள்ளும் சலுகையும் வழங்கப்படும்.

இந்தச் சலுகை ஜுன் 20 முதல் அமலுக்கு வருகிறது. கூடுதல் தகவல்களை www.bsnl.co.in இணையதளத்தில் அறியலாம் என பி.எஸ்.என்.எல். கூறப்பட்டுள்ளது.

Comment here