Sliderகல்வி

சோமசுந்தர பாரதியார்

செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே – எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே என்றுப்பாடிய சுப்ரமணிய பாரதியாரும் ,சோமசுந்தர பாரதியாரும் ஒரே நேரத்தில் தான் பாரதி என்னும் விருதைப்பெற்றார்கள் .என்ற செய்தி தெரியுமா ?நாவலர் சோமசுந்தர பாரதியார் சிறந்த தமிழறிஞர் ஆவார். இவர் பல பாடல்களையும் நூல்களையும் எழுதியதோடு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னின்று செயலாற்றியவர். மதுரை மாவட்டத்தின் தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் தலைவராகவும் செயற்பட்டவர்.

அப்போதைய எட்டையபுரத்து அரசரின் நன்மதிப்பைப் பெற்றுத் திகழ்ந்தவர் சுப்பிரமணிய நாயக்கர்.என்பவர் இவர் சென்னையிலிருந்து எட்டையபுரத்திற்குக் குடிபெயர்ந்து வந்ததால் “எட்டப்பப் பிள்ளை” என்று அழைக்கப்பட்டார். எட்டப்பப்பிள்ளை – முத்தம்மாள் இணையருக்கு மகனாக 27.07.1879 இல் பிறந்தவர்தாம் சோமசுந்தரம்.
அப்போது எட்டையபுரம் அரண்மனையில் பணியாற்றி வந்த சின்னச்சாமி ஐயரின் மகன் சுப்பிரமணியனும்,ஆகும் அரண்மனையில் வளர்ந்து வந்த சோமசுந்தரமும் சுப்பிரமணியனும் சிறு வயது முதலே நல்ல நண்பர்கள். தமிழ் மீதான ஆர்வமே இருவரையும் ஒன்று சேர்த்தது. இருவரும் இணைப் பறவையாய் பரந்த அரண்மனையில் வலம் வந்தனர்.

எட்டையபுரம் அரண்மனைக்கு வருகை தரும் தமிழ்ப் புலவர்களின் பாடல் கேட்டு மகிழ்ந்து அதேப்போல் பா புனையும் ஆற்றலை இருவரும் பெற்றிருந்தனர். ஒரு முறை யாழ்ப்பாணத்திலிருந்து புலவர் ஒருவர் அரண்மனைக்கு வந்தார். அவர் இருவரிடமும் சென்று ஈற்றடி கூறி, பாடலொன்றை இயற்றித் தருமாறு வேண்டினார். இருவரும் உடனடியாக அந்த ஈற்றடிக்கு பாடல்எழுதித் தந்தனர். அதனைப் படித்துப் பார்த்த யாழ்ப்பாணப் புலவர் மெய்சிலிர்த்து “இதுவன்றோ, அருமைப்பாடல்.” எனக்கூறி இருவ ருக்கும் “பாரதி” பட்டம் வழங்கிச் சிறப்பித்தார்.

.அன்று முதல் சோமசுந்தரம் “சோமசுந்தர பாரதி” என்றும், சுப்பிர மணியன் “சுப்பிரமணிய பாரதி” என்றும் அழைக்கப்பட்டனர்.
இவ்வாறு இருபாரதிகள் ஒன்றாக ஒரே இடத்தில் வளர்ந்து பின்பு இருவேறு திசைக்குப்போனவர்கள் .

சத்தியானந்த சோமசுந்தரன் என்ற இயற்பெயரைக் கொண்ட சோமசுந்தர பாரதியார் சுப்பிரமணிய நாயகர் (எட்டப்ப பிள்ளை) – முத்தம்மாள்தம்பதியினருக்கு மகனாக 1879 சூலை 27 ஆம் நாள் எட்டயபுரத்தில் பிறந்தார்.சோமசுந்தர பாரதியார் தனது தொடக்கக் கல்வியை எட்டயபுரத்திலும் இடைநிலைக் கல்வியை நெல்லையில் சி.எம்.எஸ். கல்லூரி பள்ளியில் கல்வி கற்றார்.நெல்லையில் படிப்பை முடித்த சோமசுந்தர பாரதி சென்னை கிருத்துவக் கல்லூரியில் பயின்று இளங்கலை (Bachelor of Arts ) பட்டமும் சென்னை சட்டக் கல்லூரியில் படித்து 1905 ஆம் ஆண்டில் சட்ட இளங்கலை பட்டமும் (Bachelor of Law) பெற்றார். தூத்துக்குடியில் வழக்கறிஞராகத் தொழிலாற்றியபொழுது தானே பயின்று 1913 ஆம் ஆண்டில் முதுகலை (Master of Arts) பட்டம் பெற்றார்.[

அப்போது வ.உ.சி.-யோடு நெருக்கம் கொண்டு பழகியதன் மூலம் இந்திய விடுதலை யின் மீது தீராப் பற்றுக் கொண்டார்.வ. உ. சிதம்பரம் பிள்ளையின் அழைப்பை ஏற்றுக்கொண்டு வக்கீலாக ஆயிரக்கணக்கில் சம்பாதித்தவர் அதை விட்டுவிட்டு, ரூ.100 சம்பளத்தில் அவரது இண்டியன் நேவிகேஷன்” என்னும் சுதேசி கப்பல் கம்பெனியின் செயலாளராகஇணைந்தார் அதன் காரணமாகவே, வ.உ.சி.தன்னிடம் இருந்த “இரண்டு சரக்குக் கப்பலோடு சேர்த்து மூன்றாவதாக ஒரு தமிழ்க் கப்பலும் என்னிடமுண்டே” என்று விளையாட்டாக மற்றவரிடம் பேசு வதுண்டு – அதாவது “எஸ்.எஸ். பாரதி” என்பதை “தமிழ்க் கப்பல்” என்று வ.உ.சி. விளித்துக் கூறுவது வழக்கம்.
வ.உ.சி.யின் கப்பல் நிறுவ னத்தை விட்டு நீங்கினால் பெரும் பதவி கிடைக்குமென்று ஆசை வார்த்தைகளை ஆங்கிலேயர் கூறி வந்தனர். அவற்றுக்கு சோம சுந்தர பாரதியார் மயங்கிட மறுத்தார். மாறாக, ஆங்கிலேயர் வ.உ.சி., சுப்பிர மணிய சிவா ஆகியோர் மீது தொடுத்த இராசதுரோக வழக்கு களை எதிர் கொண்டு வாதாடி னார்
விசுத்தலை போராட்டத்தில் தீவிரமாக அப்போது ஈடுபட்டார் .
1926 ஆம் ஆண்டில் சித்தரஞ்சன் தாசை மதுரைக்கு அழைத்து, சொற்பொழிவாற்றச் செய்தார்.காந்தியடிகள் சென்னைக்கு வந்த போது அவரை சோமசுந்தர பாரதியார் தூத்துக்குடிக்கு அழைத் துச் சென்று பொதுக் கூட்டங்களில் உரையாற்றும்படி செய்தார். காங் கிரசுப் பேரியக்கத்தில் தான் மட்டு மல்லாது, தம் புதல்வன் இலட்சு மிரதன் பாரதி, புதல்வி இலக்குமி பாரதி, மருமகன் கிருஷ்ணசாமி பாரதி ஆகியோரை ஈடுபடுத்தி பணியாற்றச் செய்தார் .

1933ஆம் ஆண்டு அண்ணா மலை அரசரின் வேண்டு கோளுக் கிணங்க, வழக்கறிஞர் தொழிலைக் கைவிட்டு அண்ணாமலைப் பல் கலைக் கழகத்தின் தமிழ்த்து றைப் பேராசிரியராக பாரதியார் பொறுப் பேற்றார். அங்கு தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக தமிழ்ப் பணியாற்றி வந்த காலத்தில்தான் 1937ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு ‘தீ’ கொழுந்து விட்டெரிந்தது.அதில் தீவிரமாக பங்குகொண்டார் .

1937ஆம் ஆண்டில் இராசகோபாலாச்சாரியார் சென்னை மாகாண முதலமைச்சராகப் பதவியேற்றபோது உயர்நிலைப் பள்ளிகளில் முதல் மூன்று படிவங்களில் (6, 7, 8 ஆம் வகுப்புகளில்) இந்தி மொழி கட்டாய பாடமாக்கப்பட்டது. தாய்மொழியைத் தவிர்த்து வேற்று மொழியைத் திணிக்கக் கூடாதென்ற கருத்தால் இந்தி எதிர்ப்பு இயக்கத்தை நாவலர் உருவாக்கினார்.
27.08.1937இல் கரந்தை தமிழ்ச் சங்கம் சார்பில் த.வே. உமா மகேசு வரனாரும், 29.08.1937இல் திருநெல் வேலித் தமிழ்ப் பாதுகாப்பு சங்கத் தின் சார்பில் மா.வே. நெல்லையப் பப் பிள்ளையும் இராசாசியின் இந்தித் திணிப்பைக் கண்டித்து முதல் குரல் எழுப்பினர்.அதன் பிறகு இந்தித் திணிப் பிற்கு எதிரான குரலை சென்னை யில் தொடங்கி வைத்த பெருமை சோமசுந்தர பாரதியாரையே சாரும்.
சென்னையில் நடைபெற்ற தொடர் இந்தி எதிர்ப்பு மாநாடுகள் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக மாவட்டந்தோறும் இந்தி எதிர்ப்பு மாநாடுகள் முளைவிடத் தொடங் கின. பல்வேறு ஊர்களுக்குப் பாரதி யாரும் பயணம் மேற் கொண்டு வீர உரையாற்றி மக்களை எழுச்சி கொள்ளும்படி செய்தார்.உடனடியாக இந்தி எதிர்ப்பு வாரியம் உருவாக் கப்பட்டது. அதன் தலைவராகப் பாரதியார் அவர்களும் செயலாள ராக கி.ஆ.பெ.விசுவநாதம் அவர் களும், உறுப்பினர்களாக ஈ.வெ.ரா., உமா மகேசுவரனார், ஊ.பு.சௌந் தர பாண்டியன், கே.எம். பால சுப்பிரமணியம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்

இந்தி எதிர்ப்புப் போரின் முடிவில் இரண்டு கோரிக்கைகள் தமிழர்களிடத்தில் வலுப்பெற்று நின்றன 1) மொழி வழித் தமிழ் மாகாணம், 2) தமிழ்நாடு தமிழ ருக்கே. இவ்விரண்டு கோரிக்கை உருவாக்கத்திலும் பாரதியாரின் பங்கு அளப்பரியது பாரதியார் தமிழ்மொழி, தமிழின அடையாளத்தை ஒரு போதும் விட்டுத்தர மறுத்தார். பெரியார் உருவாக்கிய ஆரியத்திற்கு எதிர்வகை குறியீட்டுச் சொல்லாகிய திராவிடத்தை நாவலர் பாரதியார் ஒப்புக் கொள்ளவில்லை. ஆரியர்அதற்க்கு எதிர்ச் சொல் தமிழர் என்பதே அவரது கொள்கை நிலைப்பாடாகும். இவை வரலாறுஉண்மைகள் உள்ளதை உள்ளபடி அறிதல் நமது கடமை .இதில் விருப்பு வெறுப்புக்கூடாது .

இத்தனைப்போராட்டங்களிடையே அவர் எழுதிய ஆய்வு நூல்கள் பலவபாகும் .
தசரதன் குறையும் கைகேயி நிறையும்,
அழகு, சேரர் தாய முறை, சேரர் பேரூர், தமிழும் தமிழரும், திருவள்ளுவர், தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை ஆகியவை நாவலர் சோமசுந்தர பாரதியார் எழுதிய நூல்களில் மிக முக்கிய மானவையாகும்.

திருவள்ளுவர், தொல்காப்பியர் ஆகியோரைப் பற்றி அப்போது ப் புனையப்பட்ட பொய்க்கதைகளை தன்னுடைய ஆய்வுகளின் மூலம் தகர்த்த சோமசுந்தர இத்தனை போராட்டங்களிடையே பாரதியார் பின்வரும் நூல்களை எழுதினார்:

தசரதன் குறையும் கைகேயி நிறையும் (1926)
திருவள்ளுவர் (1929) -தமிழ், ஆங்கிலம்.
சேரர் தாயமுறை (1960) -தமிழ், ஆங்கிலம்
தமிழும் தமிழரும்
சேரர் பேரூர் (தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும்)
அழகு
பழந்தமிழ் நாடு (1955)
நற்றமிழ் (1957)
படைப்பிலக்கியங்கள்
சோமசுந்தர பாரதியார் பல தனிச்செய்யுள்களை அவ்வப்பொழுது இயற்றி இருக்கிறார்.

மங்கலக் குறிச்சிப் பொங்கல் நிகழ்ச்சி: ஒரு செய்யுட் கதை (1947)
மாரி வாயில் (1936)
உரைநூல்
சோமசுந்தர பாரதியார் தொல்காப்பியத்தின் பொருள் இலக்கணப்பகுதியில் உள்ள அகத்திணை, புறத்திணை, மெய்ப்பாட்டியல் ஆகிய மூன்று இயல்களுக்கும் முழுமையாக உரை எழுதியிருக்கிறார். அவ்வுரை நூல் தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை என்னும் தலைப்பில் 1942 அம் ஆண்டில் வெளியிடப்பட்டது. மீதமுள்ளவற்றுள் களவியல், கற்பியல், செய்யுளியல் ஆகியவற்றில் இன்றியமையாச் சில நூற்பாக்களுக்கு மட்டும் புத்துரை எழுதினார். அவை அவருடைய காலத்தில் நூலாக உருப்பெறவில்லை.

பின்னர் 1997ஆம் ஆண்டில் நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி – 2 : தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை என்னும் தலைப்பில் சோமசுந்தரனார் தொல்காப்பிய பொருளதிகாரத்திற்கு எழுதிய உரைகள் அனைத்தையும் திரட்டி மதுரை ச. சாம்பசிவனாரை பதிப்பாசிரியராகக் கொண்டு வெளியிடப்பட்டது. சோமசுந்தரனாரின் மகள் மருத்துவர் லலிதா காமேசுவரன் அந்நூலை வெளியிட்டார்.
அவர் செய்த அரசியல் நூல்
”இந்தி” கட்டாய பாடமா?
வாழ்க்கை வரலாறு
நான் கண்ட சுப்பிரமணிய பாரதி

1959 திசம்பர் 2 ஆம் நாள் சோமசுந்தர பாரதியார் மதுரை பசுமலையில் உள்ள தனது வீட்டில் மயக்கமுற்று விழுந்தார். திசம்பர் 4ஆம் நாள் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். திசம்பர் 7 ஆம் நாள் தந்நினைவு இழந்தார். திசம்பர் 14ஆம் நாள் இரவு 8.40 மணிக்கு மரணமடைந்தார். திசம்பர் 15ஆம் நாள் மாலை 6 மணிக்கு அவரது உடலுக்குப் பசுமலையில் எரியூட்டப்பட்டது
அவரது நண்பரான சுப்ரமணிய பாரதியார் காணத்தவறிய பாரத தேசத்தின் விடுதலையை கண்டபிறகே சோமசுந்தர பாரதியார் 1959 இல் மறைந்தார் .
இன்னமும் தொடரும் ,
– அண்ணாமலை சுகுமாரன்

Comment here