தமிழகம்

ஜப்பானிய கல்வி ஆராய்ச்சியாளர் திரு.ஹயாத்தோ கரூர் பரணி வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் கலாச்சார பரிமாற்ற நிகழ்வில் கலந்து கொண்டார்.

கரூர் பரணி வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் கலாச்சார பரிமாற்ற நிகழ்வு

ஜப்பானிய கல்வி ஆராய்ச்சியாளர் ஹயாத்தோ கலந்து கொண்டார்

  கரூர் பரணி வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் இந்தியா ஜப்பான்  கலாச்சார பரிமாற்ற நிகழ்வு இன்று (11.07.2019) நடைபெற்றது.

இதில் ஜப்பானிய கல்வி ஆராய்ச்சியாளர் திரு.ஹயாத்தோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவர் துவக்க வகுப்புகளில் இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கிடையே உள்ள கல்விமுறையை ஒப்பிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார். ஜப்பான் பள்ளிகளை ஒப்பிடும்போது பரணி வித்யாலயா பள்ளியில் குழந்தைகளுக்கு எழுதும் வேலை மிகவும் குறைவாகவே உள்ளது. இந்திய குழந்தைகள் மகிழ்வாக கல்வி கற்கிறார்கள். இந்திய மண்ணில் பிறந்த குழந்தைகளாகிய நீங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்று கூறினார். மேலும் அவர்களுடைய கலாச்சாரத்தை விளக்கும் வகையில் ஜப்பான் பாடலை பாடி, ஜப்பானிய முறையான “கெண்டோ” சிலம்பம் சுற்றினார். பரணி வித்யாலயா மாணவர்கள் நமது கலாச்சாரத்தை எடுத்துரைக்கும் வகையில் பரதநாட்டியம், கிராமிய நடனம், சிலம்பம், தப்பாட்டம் ஆடினர்.

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் S.மோகனரெங்கன், செயலாளர் பத்மாவதி மோகனரெங்கன், பள்ளியின் முதன்மை முதல்வர் முனைவர் C.ராமசுப்ரமணியன், நிர்வாகக்குழு உறுப்பினர் சுபாஷினி, ஜப்பானிய மொழி பயிற்றுநர் தமிழ் ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளியின் முதல்வர் S.சுதாதேவி வரவேற்புரையாற்றினார். துணை முதல்வர் R.பிரியா நன்றியுரையாற்றினார்.

Comment here