வரலாறுவிளையாட்டு

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க முடிவு?

புதுடில்லி:

ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பாரம்பரிய வீர விளையாட்டு போட்டி களுக்கு அனுமதி அளிக்கும் வகையில், பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதாவை கொண்டு வருகிறது மத்திய அரசு.

தமிழகத்தில், பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு எனப்படும் வீர விளையாட்டு பாரம்பரியமாக விளையாடப்பட்டு வருகிறது. இதைத் தவிர, ரேக்ளா போட்டிகள், மாட்டு வண்டி போட்டி என, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் காளைகளை பயன்படுத்தும் போட்டிகள் நடந்து வந்தன.
தடையை நீக்க மறுப்பு

ஜல்லிக்கட்டு உள்ளிட்ட இந்த வீர விளையாட்டு போட்டி களுக்கு, 2014ல், நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், பினாகி சந்திர கோஷ் ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வு தடை விதித்தது.இதை எதிர்த்து, தமிழக அரசு சார்பிலும், மத்திய அரசு சார்பிலும் வழக்குகள் தொடர்ந்த போதும், இந்தத் தடையை நீக்க சுப்ரீம் கோர்ட் மறுத்து வந்தது.

பிராணிகள் வதை

ஜல்லிக்கட்டு உள்ளிட்டவற்றுக்கு அனுமதி அளிக்கும் வகையில், இந்த ஆண்டு துவக்கத்தில் மத்திய அரசு சட்டத் திருத்தம்

கொண்டு வந்தது. ‘காட்சிக்கு தடை செய்யப்பட்டுள்ள விலக்குகள் பட்டியில் இருந்து காளைகளை நீக்காததால் தடையை நீக்க முடியாது’ என, சுப்ரீம் கோர்ட் கூறியிருந்தது.இந்நிலையில், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போட்டிகளுக்கு
அனுமதி அளிக்கும் வகையில், பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யும் வரைவு மசோதாவை, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை, மத்திய அமைச்சரவைக்கு அனுப்பியிருந்தது; இது சட்டஅமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்தது. சட்ட அமைச்சகம், இந்த வரைவு மசோதாவுக்கு நேற்று ஒப்புதல் அளித்தது.

பெரும் மகிழ்ச்சி

இதற்கான மசோதா, மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டு, வரும், 18ம் தேதி துவங்கும் பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.மத்திய அரசின் இந்த தீவிர நடவடிக்கைகள், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டில் ஈடுபட்டுள்ள ஆர்வலர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சட்ட திருத்தம் என்ன?

பிராணிகள் வதை தடுப்புச் சட்டம், 22வது பிரிவில், புதிய துணைப் பிரிவு சேர்க்கப்பட உள்ளது.’தடை செய்யப்பட்டுள்ள பட்டியலில் உள்ள விலங்குகளை, தொடர்ந்து காட்சி விலங்காக பயன்படுத்த பயிற்சி அளிக்கலாம். நாட்டின் எந்தப் பகுதியிலும், குறிப்பிட்ட மதம் அல்லது பாரம்பரிய நிகழ்ச்சிகளில் இவற்றை பயன்படுத்தலாம்’ என, புதிய சட்டத் திருத்தம் கொண்டுவரப்படுகிறது.
மேலும் எந்தெந்த நிகழ்ச்சி கள் என்பது குறித்தும் சட்டத் திருத்தத்தில் குறிப்பிடப்பட உள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கும்; மஹாராஷ்டிரா, கர்நாடகா, பஞ்சாப், ஹரியானா, கேரளா மற்றும் குஜராத்தில், மாட்டு வண்டி ர

நடத்துவதற்கும் அனுமதி வழங்கப்படும். தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் வீரத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதில், கடந்த, 10 ஆண்டுகளாக நீடித்து வந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மத்திய அரசின் அறிவிப்பு அமைந்துள்ளது; இது வரவேற்கத்தக்கது. நாம் வாழும் காலத்தில் ஜல்லிக்கட்டு என்னும் பாரம்பரியத்தை இழந்து விடுவோமோ என்று மாடுபிடி வீரர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் ஏற்பட்டிருந்த அச்சம் நீங்கி உள்ளது.ராஜசேகர், ஜல்லிக்கட்டு பேரவை தலைவர்

பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்தில் காளைகளை, காட்சி அளிக்கும் விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்குவது போன்ற குறுக்கு வழிகளை விடுத்து, பார்லிமென்டில் சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும் என, அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி, மத்திய அரசிடம் தெரிவித்திருந்தார். அதை ஏற்று, தற்போது கொண்டு வரப்படவுள்ள சட்டத்திருத்தம், ஜல்லிக்கட்டுக்கு உயிர் கொடுக்கும். புதிய சட்டம் வந்துவிட்டால் அதை எதிர்த்து யாரும் நீதிமன்றத்தை அணுக முடியாது. பாலகுமார் சோமு, இந்திய பல்லுயிர் பாதுகாப்பு அமைப்பு துணைத் தலைவர்

Comment here