அரசியல்

ஜூலை 18 முதல் பார்லி., மழைக்கால கூட்டத்தொடர்

பார்லி., மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 18 ம் தேதி துவங்கி, ஆகஸ்ட் 12 ம் தேதி வரை நடைபெற உள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் டில்லியில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் 7 வது சம்பள கமிஷனுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பின்னர் பார்லி., மழைக்கால கூட்டத் தொடர் நடைபெறும் தேதி குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பார்லி., விவகாரத்துறை அமைச்சர் வெங்கைய்ய நாயுடு, ஜூலை 18 ம் தேதி முதல் ஆகஸ்ட் 12 ம் தேதி வரை பார்லி., மழைக்கால கூட்டத் தொடர் நடத்தப்பட உள்ளது. இந்த கூட்டத் தொடரில் ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்றுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்படும். ராஜ்யசபாவில் 45 மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. லோக்சபாவில் 11 மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற ஆதரவு தாருங்கள் எனக்கூறினார்.

Comment here