அரசியல்

ஜெகன்மோகன் ரெட்டியின் ரூ. 749 கோடி மதிப்பிலான சொத்துக்கள் ஜப்தி

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங். கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி. இவர் மறைந்த முன்னாள் ஆந்திரா முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன். ராஜசேகர ரெட்டி ஆட்சியின் போது பல்வேறு நிறுவனங்களிடமிருந்து லஞ்சமாக பணம் பெற்றதாக ஜெகன் மோகன் ரெட்டி மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது உறுதி செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக ஜெகன் மோகன் ரெட்டிக்கு சொந்தமான பெங்களூரூ, ஐதராபாத் ஆகிய நகரங்களில் உள்ள ரூ. 749 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை ஜப்தி செய்தது.

Comment here